கைதிகள் – கடிதம்

வணக்கம் சார்,

எனது பெயரை முதன் முதலாக நமது தளத்தில் பார்த்தது மாடத்தி திரைப்படத்தை பற்றி கடலூர் சீனு எழுதியபோது.

மாடத்தியின் திரைக்கதை அமைப்பை பற்றி தமிழில் எவருமே எழுதியிராத சூழலில் அவர் எனது பெயரை குறிப்பிட்டு திரைக்கதை அமைப்பையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.  அது மிகுந்த உற்சாகத்தை தந்தது. (நமது தளத்தில் வெளியான விமர்ச்சனங்கள் கற்றுக் கொண்டு மேலேறி செல்லும் படியான அவதானிப்புகளை முன்வைத்தன.)

இன்று உங்களது எழுத்தின் வழியே எனது பெயரை வாசிக்க வாய்த்தது நிஜமாகவே Fanboy Exciting moment தான்.  நன்றி சார்.இன்னும் சில நாட்களில் first look வெளியிடும் திட்டமிருக்கிறது.

அரைநாள் மட்டும் படப்பிடிப்பு மீதமிருக்கிறது இந்த வாரத்தில் அதுவும் முடிந்துவிடும். dubbing முடித்துவிட்டோம்.  music composing, sound composing, VFX, CG வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படம் தயாராகிவிடும்.  பட வெளியீட்டு நாள் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

படப்பிடிப்புக்கு முன் கமல்சார் வெண்கடல் தொகுப்பில் வாழ்த்து செய்தியை எழுதி தந்து சமரசமின்றி படமாக்கும்படி அறிவுறுத்தியிருந்தார். எடுத்திருக்கும் வேலையின் பெருமதியை உணர்ந்து அர்பணிப்புடன் வேலை செய்திருக்கிறோம்.  உங்களது ஆசி என்றும் துணை நிற்கட்டுமாக.

அன்புடன்

ரஃபீக் இஸ்மாயில்

அன்புள்ள ரஃபீக்,

கமல் உட்பட அனைவருக்கும் உங்கள் மேல் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளிவந்தபின் அரங்கில் ஒலிக்கும் விசில்களில் ஒன்றாக என்னுடையதும் இருக்கட்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.