நாககுமார காவியம், தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. தமிழில் கடைசியாக ஏட்டிலிருந்து வெளிவந்த தொல்நூல் இதுவே. 1973ல்தான் இதை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்தார். ‘அச்சில் வாரா அருந்தமிழ் நூல்’ என்ற வரிசையில், 1973-ல், சென்னைப் பல்கலைக் கழகம் இந்த நூலை வெளியிட்டது. ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களுக்கு இக்காவியப் படியைத் தந்தவர் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள தச்சாம்பாடியைச் சேர்ந்த சமணப் பேரறிஞர் ஜெ.சின்னசாமி நயினார் அவர்கள்.
நாககுமார காவியம்
Published on August 27, 2022 11:34