தமிழ் விக்கி தூரன் விருதுகள்- விருந்தினர். எஸ்.ராமச்சந்திரன்
தமிழ் விக்கி- தூரன் விருது வழங்கும் விழா 14- ஆகஸ்ட்- 2022 அன்று காலைமுதல் இரவு வரை ஈரோட்டில் நிகழ்கிறது. (முந்தையநாளே வந்து தங்க விரும்புபவர்களுக்கு இடவசதி உண்டு). இதில் ஆய்வாளர்களை வாசகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி அமைகிறது. இந்நிகழ்வு ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்பதை பொதுவாசகர்கள் உணர்வதற்கான அரங்கு.
தமிழ் விக்கி- தூரன் விருது விழாவில் வரலாற்றாய்வாளர் – பண்பாட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொள்கிறார். வாசகர்களுடன் ஒரு மணிநேரம் உரையாடுவார்.
எஸ்.ராமச்சந்திரன் நீண்டகாலம் கொற்கையில் பணியாற்றியவர். தமிழக வரலாற்றாய்வில் ஒரு கட்டத்தில் உருவான தேக்கத்தை பல புதிய முன்னூகங்கள் வழியாகத் தகர்த்தவர் ராமச்சந்திரன். உதாரணமாக அவர் காந்தளூர்ச்சாலை பற்றி முன்வைக்கும் புதிய ஊகத்தை சொல்லலாம்
வரலாற்றாய்வை பண்பாட்டு ஆய்வுடன் இணைத்து நிகழ்த்தியவர், சாதிகளின் உருவாக்கத்தையும் அமைப்பையும் செயல்முறையையும் கருத்தில் கொண்டு நுண்வரலாற்றாய்வை நிகழ்த்தியவர் என ராமச்சந்திரனின் பங்களிப்பை வரையறை செய்யலாம்.
வரலாற்றில், பண்பாட்டில் ஆர்வமுள்ளவர்களை கொந்தளிக்க, சிந்திக்க, குழம்ப, நெடுந்தொலைவு செல்லச் செய்யும் ஆய்வுகளும் கருதுகோள்களும் நிறைந்தவை ராமச்சந்திரனின் எழுத்துக்கள்.
ராமச்சந்திரன் தமிழ் விக்கி
காந்தளூர் சாலை கலமறுத்தருளி எஸ்.ராமச்சந்திரன் எஸ்.ராமச்சந்திரன் மீனாட்சி பற்றி நாகராஜாவும் நாகரம்மனும் முத்தூற்றுக் கூற்றம் – கள ஆய்வு எறாடி ராஜாக்கள் யார்? வல்லம் பிரகாரப் போரும் வெங்கலராஜனும் கறுப்பு வெள்ளை சிவப்பு நாஞ்சில் குறவன் என்பவன் யார்? காமவேள் விழவு குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் வரலாறா கற்பனையா? ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் திருமகள் உற்பத்தி பண்டைத்தமிழகத்தில் இந்திரவழிபாடு கொற்றவை மலை ஐயன் தைநீராடல் முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்தது ஏன்? திருமண ஏசல் பாடல்கள் சிலப்பதிகாரத்தின் காலம் திருமெய்யம் கல்வெட்டு தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

