நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் மாதாந்திர இலக்கிய கூடுகையின் நான்காம் ஆண்டு, ஜூலை 2022 இல் துவங்குகிறது.
முதல் அமர்வில், வெண்முரசு கூடுகை – 19 இல் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான “இந்திரநீலம்” நாவலின் முதல் மூன்று பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதிகள்:
மலைமுடித்தனிமைமழைத்துளிகள்வான்தோய் வாயில்
இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில், நமது வாசகர் குழும ஆண்டின் துவக்க நாளை கொண்டாடும் விதமாக மாதாந்திர நாவல் வாசிப்பு வரிசையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘விஷ்ணுபுரம்’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 31-07-22, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
Published on July 29, 2022 11:30