Qissa-e-Parsi என்ற பார்ஸி இனம் குறித்த ஆவணப்படத்தைப் பார்த்தேன்.
பார்ஸிகளின் பூர்வீகம். அவர்களின் வாழ்க்கை முறை, வழிபாடு, உணவு மற்றும் நகைச்சுவை உணர்வு. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த போது மேற்கொண்ட வணிகம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான அவர்களின் மாற்றம். புகழ்பெற்ற பார்ஸி பிரபலங்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்களிப்பு செய்த பார்ஸி இனத்தவர்கள் என விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்
உணவு மற்றும் நகைச்சுவை உணர்வை பற்றிய பகுதி தனித்துவமானது. மும்பையின் வளர்ச்சிக்கு பார்ஸிகள் செய்துள்ள பங்களிப்பு. ஆங்கிலேயர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம், மற்றும் திருமண விஷயத்தில் அவர்கள் காட்டும் தீவிரக்கட்டுபாடு என வெளிப்படையாக, நேர்மையாக செய்திகளை தொகுத்து தந்திருக்கிறாரகள்
இந்த ஆவணப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது
Published on July 21, 2022 05:19