அன்பு ஜெ,
யுவன் சந்திரசேகர்
கமலதேவி
வணக்கம்.
நலம் விழைகிறேன்.யுவன் சாரின் தமிழ்விக்கிப் பதிவை பார்த்ததும் இந்த நேர்காணலை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன். கானல்நதி நாவலை மையமாக்கி புரவி இதழிற்காக செய்யப்பட்ட நேர்காணல். அவருடன் பேசிய இரண்டு மணி நேரத்தை மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். என்னுடைய குரல் மிக மெதுவானது. அதுவும் இயல்பாக பேசத்தொடங்கும் போது அதனுடைய இயல்பான நிலைக்கு சென்றுவிடும். முதல் பத்து நிமிடங்களுக்குப்பிறகு அவருடன் இயல்பான பேசத்தொடங்கினேன். அவர் அடிக்கடி குரல் உள்ளே போயிடுத்தே..கீழப்போயிச்சேம்மா என்று பொறுமையாக நினைவுபடுத்தினார். நான் அவரை இப்படி தொந்தரவு செய்தாலும் கூட நல்ல நேர்காணலாக அமைந்தது. அவர் அப்படி நினைவுபடுத்துப் போது“நான் உன்ன கஸ்ட்டப்படுதறேன்னாம்மா..”என்று ஆதுரத்துடன் கேட்டார். நான் தான் அவரை என் குரலால் இம்சை படுத்தினேன்.அன்புடன்,கமலதேவி
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்
Published on July 20, 2022 11:31