நாய்க்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நாயைக் கல்லால் அடித்தால் குரைக்கும். குரைத்து விட்டுப் போய் விடும். குரைத்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படாது. நான் படுவேன். இப்படி வாரம் ஒருமுறை குரைத்து விட்டு, வாரம் பூராவும் குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படுவேன். பிறகு அடுத்த வாரம், அடுத்த குரைப்பு. ஆக, ஒவ்வொரு நாளுமே குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டவனாகவே வாழ வேண்டியது என் வரம். ஆனால் தினமும் குரைக்க மாட்டேன். குரைக்கவே கூடாது என்ற மன உறுதியிலும் ...
Read more
Published on June 23, 2022 22:22