ஜெகசிற்பியன், லா.ச.ரா – கடிதங்கள்

ஜெகசிற்பியன் ஜெகசிற்பியன் – தமிழ் விக்கி ஜெகசிற்பியன்

அன்புள்ள ஜெமோ

நன்றி.

நான் இளவயதில் ஆலவாயழகன், பத்தினிக்கோட்டம் எல்லாம் படித்திருக்கிறேன். ஆலவாயழகனின் மொழி அந்த வயதில் ஒருமாதிரி ஒரு கிறுகிறுப்பை அளிப்பதாகவே இருந்தது.

இப்போது உங்கள் ஜெகசிற்பியன் இணைப்பு வழியாக போய் நகுபோலியன் எழுதிய மழநாட்டு மகுடம் வாசித்தபோது வரிக்கு வரி சிரிப்புதான் வந்தது.

நன்றி. ஒரு நல்ல வாசிப்பனுபவம்

ஆர். எஸ்.ராகவன்

***

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நான் உண்மையாகவே கேட்கிறேன். ஆலவாயழகனின் மொழியை கிண்டல் செய்யும் நகுபோலியன் லா.ச.ராமாமிருதத்தின் மொழி பற்றி என்ன சொன்னார்? இரண்டுமே flowery and futile நடைதான். Juvenile காலகட்டத்தில் ஒருவர் ஆலவாயழகனை வாசித்து கொஞ்சம் உணர்ச்சிவசப்படலாம். ஐம்பது அறுபது வயதிலும் லா.ச.ரா படித்து உச் உச் அடாடா கொட்டுவதை எதில் சேர்ப்பது?

முருகவாணன்

லா.ச. ராமாமிர்தம் லா.ச. ராமாமிர்தம் லா.ச.ரா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.