டால்ஸ்டாய் நாவலுக்கான அட்டை வடிவமைப்பினை முடித்து மணிகண்டன் அனுப்பியிருந்தார். மிக நன்றாக வந்துள்ளது.
நாவலின் அட்டைப்படம் சரியாக வரவேண்டும் என்பதற்காக பத்திற்கும் மேற்பட்ட அட்டைகள் வடிவமைத்துப் பார்த்துவிட்டோம். எதுவும் என் மனதிற்கு நெருக்கமாகயில்லை
முடிவில் டால்ஸ்டாயின் இந்த படமும் அதிலுள்ள அவரது முகபாவமும் நாவலின் மையக்கதைக்கு மிக நெருக்கமாக இருந்தது. இதுவே நாவலின் அட்டை வடிவம்.
நாவல் கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகிறது
விலை ரூ 350
டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் இந்த நாவல் வெளியாகிறது
Published on December 18, 2021 05:43