என்னுடைய பட்டியலைக் கண்டு யாரும் மிரளவோ வருத்தப்படவோ கூடாது. ஏனென்றால், அதில் மிக முக்கியமானவர்களின் பெயர்களெல்லாம் விடுபட்டு விடும். சீனியின் பெயர் பட்டியலில் இருக்கிறது. ஆனால் அவரோடு நான் வாரம் ஒருமுறைதான் பேசுவேன். கார்த்திக் பிச்சுமணியுடன் வருடம் ஒருமுறைதான் பேசுவேன். தினமும் பேசுவது கிருஷ்ணமூர்த்தி என்கிற கிருஷ்ணா. அவர் பெயரே பட்டியலில் இல்லை. நேற்று கூட வீடு தேடி வந்தார். சொல்லாமல் திடீரென்று வந்தால் என்னைப் பார்க்க முடியாது. எழுதிக் கொண்டிருக்கும்போது என்னை யாரும் தொடர்பு கொள்ள ...
Read more
Published on December 15, 2021 20:44