நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ போகவில்லை. காதர் நவாஸ் கான் ரோடு போய் விட்டேன். என் நண்பர் மகேஷ் முகநூல் பார்க்க மாட்டார். ஆனால் நேற்று ஏதோ எதேச்சையாகப் பார்த்திருக்கிறார். ஊரில் பெரும்பாலும் இல்லாதவர் நேற்று ஊரில் இருந்திருக்கிறார். எப்போதும் வேலை மும்முரத்தில் இருப்பவர் நேற்று கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கிறார். நான் வரட்டுமா என்றார். கரும்பு தின்னக் கூலியா என்றேன். காதர் நவாஸ் கானில் தொஸ்கானோ என்ற இத்தாலிய உணவகம் உள்ளது. அங்கே போனோம். மகேஷ் கேரளத்தைச் சேர்ந்தவர் ...
Read more
Published on December 01, 2021 21:12