ஒரு நாள் கருத்தரங்கம்
நாளை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நற்றுணை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கல்விப்புலங்களில் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்குகள் நிறையவே நடந்துள்ளன. எனது படைப்புகளை ஆராய்ந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பொதுத்தளத்திலும் நிறைய விமர்சனக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன.
அத்தனையும் தாண்டி இந் நிகழ்வு எனக்கு விசேசமானது. இதில் உரையாற்றுகிறவர்கள் எனது அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள். தீவிர வாசகர்கள். அவர்களின் மதிப்பீடும் விமர்சனமும் முக்கியமானது.
இந்நிகழ்வை நீதிநாயகம் சந்துரு அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார் என்பது பெருமைக்குரியது.
நிகழ்வு நடைபெறும் இடம்
நிவேதனம் அரங்கு.
234, வெங்கடாசலம் தெரு (, near yellow pages)
மயிலாப்பூர்
(டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வந்தால் yellow pages bus stop வரும். அதன் பக்கத்து வீதி )
உதவிக்கு அழைக்கவும்:
90431 95217
90424 81472
நேரம் :
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
14/ 11/21

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
