தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த ஒருவருக்கும் ஒரு லட்சம் பணமும் பாராட்டு பத்திரமும் அளித்துக் கௌரவிக்கப்படுகிறது.
2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களில் உரைநடைக்காக எனக்குக் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கபட்டுள்ளது

இதற்காக வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் வாசகர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி
தேர்வு செய்யப்பட்ட விருதாளர்கள்
.அபி (கவிதை), இராசேந்திர சோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா (காஷ்மீரி)
Published on October 02, 2021 22:13