இன்று மாலை அராத்து போன் செய்து ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர் என்ற சிறுகதையைப் படித்தேன் என்றார். அருஞ்சொல் இதழில் வந்திருந்ததை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதனால் படித்ததாகச் சொன்னார். நான் அந்தக் கதையை குப்புசாமியின் தேர்வுக்காகவும் அவரது மொழிபெயர்ப்புக்காகவும் அருஞ்சொல் இதழுக்காகவும் மட்டுமே பகிர்ந்திருந்தேன். நான் படிக்கவில்லை. படிக்கவும் நேரம் இல்லை. அதோடு ரேமண்ட் கார்வர் பற்றி அதிகம் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உலக அளவில் மிகவும் பிரபலமானவர். ...
Read more
Published on September 25, 2021 09:06