நான் சக்தி உபாசகன். ஆண் தெய்வங்களை வழிபடுவதில்லை. ஆனாலும் ஸ்ரீ ஜெயந்தியை படு விமரிசையாகக் கொண்டாடுவேன். சீடை முறுக்குக்காக. இந்த ஆண்டு வெறும் அவல் பாயாசத்தோடு முடிந்தது கொண்டாட்டம். அநியாயம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போயிருக்க வேண்டும். (இந்த வார்த்தையில் ஒரு பிரச்சினை இருக்கிறது. பிறகு பார்ப்போம்.) கொரோனா காரணமாகத் தள்ளிப் போட்டேன். ஆனால் இனியும் தள்ளிப் போட முடியாது என்று தோன்றியபோது சென்று விட்டேன். இருந்தாலும் தேதிகளைப் பார்த்து ஸ்ரீஜெயந்தி வருகிறது என்று தெரிந்திருந்தால் இன்னும் ...
Read more
Published on September 01, 2021 03:31