பஷீரும் தகழியும்
புனலூர் ராஜன் எடுத்த பஷீரின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறப்பான புகைப்படங்கள்.

ராஜன் ரஷ்யாவிற்கு சென்று மாஸ்கோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த USSR Institute of Cinematographyயில் மூன்று ஆண்டுகள் ஒளிப்பதிவு பயின்றவர். அன்றைய கேரள கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான திரைப்படங்களை தயாரிக்க விரும்பியது. அதன் பொருட்டே ராஜன் ரஷ்யா அனுப்பி திரைக்கலை பயின்று வந்தார். ராஜனின் மாமா கம்பிசேரி கருணாகரன் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்.


ராஜன் ஒளிப்பதிவு படித்து முடித்து திரும்பிய போது கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக சினிமா எடுக்கும் முடிவு கைவிடப்பட்டிருந்தது. ஆகவே கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் புகைப்படக்கலைஞராக வேலைக்கு சேர்ந்தார். அங்கே பணியாற்றியபடியே கேரளாவின் அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்த துவங்கினார். எழுத்தாளர்களைத் தேடிச் சென்று புகைப்படங்கள் எடுத்தார். அதிலும் பஷீருடன் இவருக்கு இருந்த நட்பு ஆழமானது. இவர் எடுத்த புகைப்படங்களே பத்திரிக்கைகளில் அதிகம் வெளியாகின. மிகுந்த கலைநேர்த்தியுடன் இந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பஷீர் காட்டிய ஆர்வத்தை ராஜன் இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார். புனலூர் ராஜன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவரே தனது புகைப்படங்களுடன் ஒரு நூல் எழுதியிருக்கிறார்
காணொளி
கேரளாவில் எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் வீடு நினைவகமாக மாற்றபட்டு பாதுகாக்கபட்டு வருகிறது. தகழியின் செம்மீன் நாவல் சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. மிகச்சிறந்த மொழியாக்கம்.

அந்த வீடு குறித்த காணொளி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
