அந்த செய்தியை அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டதுமே எனக்கு படபடப்பாய் இருந்தது. கண்கூட இலேசாக இருட்டிக் கொண்டு வந்தது. உடனே ஜோதி டீச்சரின் முகம்தான் மனதில் வந்தது. போய் அவரிடம் சொல்லவேண்டும். அவர் எப்படி இதை எதிர்கொள்கிறார் என்று பார்க்கும் குரூர ஆசை ஒன்றும் மனதில் முகிழ்த்து அடங்கியது.
மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்
Published on July 23, 2021 11:33