‘சம்பூர்ண ராமாயணம்’ படம் பார்க்கும்போது எனக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் எங்கள் வீட்டில் அப்பாவின் ‘சாங்க்ஷ’ னுக்காக நாங்கள் ஒரு குட்டி நாடகமே போடவேண்டியிருக்கும். கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க போகும் வழியில் நானும் பாட்டியும் திட்டமிடுவோம். வெள்ளிக்கிழமையன்று வரவிருக்கும் படத்தின் போஸ்டரை வியாழக்கிழமை மாலை செல்வமணி மாமாவின் டீக்கடை வாசலில் பார்த்ததிலிருந்து திட்டமிடுதல் கட்டம், கட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும்.
மாயச்சாளரம் – அருண்மொழி நங்கை
Published on July 09, 2021 11:36