
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படும்.
ஞானபீடம், சாகித்ய அகாதமி உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும்
மதுரையில் எழுபதுகோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் உருவாக்கப்படும் என்று மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த நற்செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அரசு அமைத்திருப்பதன் அடையாளமிது.
பெருந்தொற்றின் இடர் சூழ்ந்த காலத்தினுள்ளும் எழுத்தாளர்களின் நீண்ட காலக்கோரிக்கைகளை ஒரே உத்தரவில் நிறைவேற்றி எழுத்துலகை மகிழ்ச்சிப்படுத்தியது போற்றுதலுக்குரிய செயல்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நிறைந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
•••
Published on June 03, 2021 05:12