இந்தக் கதை பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவன் தன் வாழ்நாளை ஒரு நிமித்திகரிடம் கணிக்கும்போது நாளை அவன் இறக்கப்போவதாகத் தெரிவிப்பார். அவன் தன் ஊழை மாற்றி மரணத்தின் கையிலிருந்து தப்பிக்க எண்ணினான். தான் இதுவரை இருக்கும் இடத்திலேயே இல்லாமல் வேறு இடம் சென்றுவிட்டால் மரணத் தேவதை அவன் வீட்டில் வந்து ஏமாந்து போய்விடும் என எண்ணி கடுமையாக முயற்சி செய்து, விரைவு வண்டியில் பிரயாணித்துவெகுதொலைவில் பலநூறு மைல்கள் தாண்டி வேறு ஒரு ஊருக்கு இரவோடு இரவாக சென்று விட்டான். ஆனால், மறுநாள் அவனிருக்கும் இடதிற்கு வரும் மரணதேவதை, “ஓ வந்துவிட்டாயா? உன் உயிரை இன்று இங்கு நான் கவர வேண்டும் என உள்ளது. ஆனால் நீ வெகுதொலைவில் இருக்கிறாயே என்று எண்ணினேன்” என்று சொல்லி அவன் உயிரை கவர்ந்து சென்றது.
நீர்ச்சுடர் – அவல நகைச்சுவை
Published on March 06, 2021 10:30