குமுதத்துக்கு இன்று மதியம் பன்னிரண்டு மணிக்குள் கட்டுரை போய்ச் சேர்ந்தாக வேண்டும். இன்று மாலைக்குள் எக்ஸைல் பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். 900 பக்கத்தில் 300 பக்கம் முடித்திருக்கிறேன். அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக் கொண்டிருப்பதற்குக் காரணம், பா. ராகவனின் யதி நாவல். இன்று காலை நாலு மணிக்கு அதைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாக அதைப் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று மேஜையிலேயே வைத்திருக்கிறேன். ...
Read more
Published on February 23, 2021 21:38