முகமூடிகளின் பள்ளத்தாக்கு இன்று அச்சுக்குப் போய் விடும். எல்லா எழுத்தாளர்களுக்குமே தாங்கள் எழுதிய நாவல்தான் தங்கள் குழந்தை மாதிரி. ஆனால் எனக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு அப்படி அல்ல. ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அப்படி ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை. இதை நான் மட்டுமல்ல, படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுவேன். ஆஷிஷ் நந்தியும் அதையேதான் சொல்லியிருக்கிறார்: இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. நான் ...
Read more
Published on February 17, 2021 22:17