கதைகளின் உலகம்- கடிதங்கள்
“முதல் ஆறு ” சிறுகதையை படித்துகொண்டிருக்கும்போது காதல்கதையா? என்ற சலிப்பு வந்தது உண்மை. காமத்தை போல கொண்டாட்டமும் காதலை போல சலிப்பும் எதற்கும் வருவதில்லை.
ஆனால் முதல் காதல் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதன் திரில்லும் தனி அனுபவம் தான். ஒரு இளைஞனின் பார்வையில் ஒரு ஏரியா நெரிசலான மக்கள் திரளோடு சொல்லபடுகிறது.அதற்குள் தொடங்குவதும் வளர்வதும் ஆன காதல் இன்னொரு ஏரியாவில் தனிமையில் ரம்மியமான இடத்தில் ஆனால் ஒரு பதட்டத்தில் இணைந்து கொள்கிறது. இப்படி தருணங்கள் வாய்ப்பதும் அதை பயன்படுத்தி கொள்வதும் தான் ஆண்-பெண் உறவு தொடங்க அடிப்படை போலும்.
ஆனால் முதல் குளம் முதல் கடல் என்று தலைப்பு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஒரு வேளை ஆறுமாதிரிதான் முதல் காதலும் ஓடிவிடுமா?
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு
நலம் தொடர்க!
அந்தி எழுகை என்று பிப்ரவரி மாதத்தில் ஒரு பதிவிட்டிருந்தீர்கள். அதை இந்நாட்களில் வெகு அருகில் உணர்கிறேன். நீர்வீழ்ச்சியென்ற சொல்லை அகற்றி அருவியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதைப்போல், இனி அஸ்தமனம் என்று சொல்லை அகற்றி அந்திஎழுகையைக் கைக்கொள்ளவேண்டும். அனுபவத்தோடு சேரும்போது அதன் ஆழம் மேலும் கூடுகிறது.
ஏற்கனவே ஒரு நியதிப் பட்டியல் தயார் செய்திருந்தேன். நகைச்சுவைக்கு முதலிடம். என் கணிணியில் எனக்கு விருப்பமான் “மாடன் மோட்சமும்’ ‘ விசிஷ்டாத்வைதமும்’ மேற்திரையிலேயே வைத்திருக்கிறேன். அந்த வரிசையில் “ஆனையில்லா’வும், ” ‘நகைமுகனும்’ சேர்ந்துவிட்டன. இடையில் ‘காடு’ பாதிக்குமேல் மண்டையில் கேறிக்கிடப்பதால் வட்டார வழக்குகளை புரிந்துகொண்டு சிரிக்க முடிகிறது. வாசகர்களை கிட்டத்தட்ட ஒரு பரீட்சைக்குப் படிக்கும் மாணவனின் மனநிலைக்குத் தள்ளுகிறீர்களென்று தோன்றுகிறது. மழைத்துளிகளின் தொடர்ச்சிபோல் வாசகர்களை துரத்தும் வேகத்தோடு சிறுகதைகள் வெளீயாகின்றன.
கதைகளின் பல உவமைகள் ஆழ்மனதில் தங்கி அதன் தருணங்களில் மீண்டெழுவது என் வாசிப்பனுபவத்தில் நிகழும் ஒன்று. குதிரையின் மீது அரும்பிய குருதித்துளிக்கு தெட்சிப்பூ மொட்டை உருவகித்து வெண்முரசில் வரும். நீருற்றும்போது குருதிமொட்டென்ற சொல் மனதில் எழாமல் இருப்பதில்லை. ‘நடுவு நோக’ குதிரைமேல் அமர்ந்திருக்கும் சுதைச்சிலைகளை இரண்டுமுறை சமீபத்தில் பார்த்தபோது சிரித்தேன். நகைமுகன் படித்தபிறகு, இருபுறமும் சற்றே புஸ்ஸென்று மீசை வைத்த நபரை பார்க்க நேர்ந்தால் எவ்வாறு எதிர்கொள்வேன்? கடினம் தான்.
அலுவலகம் செல்லும் வழியில் ( அல்லது சில நேரங்களில் மரங்களுக்காக வழிமாற்றம்) கொன்றை மரங்களைக் கோடையில் தவறவிடுவதேயில்லை. மிளிர்கொன்றை என்ற சொல்லாடல் தரும் பரவச அனுபவம் ஒரு உன்னதம். வெளியில் செல்ல இயலாத இந்நாட்களில் வந்தது ‘பொற்கொன்றை’ பதிவு. மொட்டைமாடி வாய்க்கப்பெற்ற எனக்கு, கதிர் எழுகையைக் காணமுடியாவிடினும் மேற்குத் தெருவில் மாடி உயரத்தை மீறிய சரக்கொன்றைகளை அந்தி எழுகையில் பார்க்கும் பேரானந்தத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றில்லாத பொழுதில் வானின்று இறங்கும் பொன் சரங்களின் கூட்டம் ஒருகணத்தில் உறைந்தது போல் அசைவற்றிருக்கிறது. மெல்லிய மாலைக்காற்றில் நலுங்கும்போது கதிர்களை தன்னூடாக செல்ல அனுமதிக்கிறது. கடைசிக்கதிரின் வெளிச்சமும் மறைந்து கற்சிலைமேல் எண்ணைஒழுக்கென இரவெழும் பொழுதிலும் மிளிர்கிறது பொற்கொன்றை.
வெளிநாடுகளில் உயர் பயிற்சிபெற்ற மனவியல் வல்லுனர்கள் நேரலைக்காணொளி மூலம் மனதின் திண்மையை இந்நாட்களின் வளர்த்துக்கொள்வதெப்படி என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக அமெரிக்கா வாழ் உறவினர் மூலம் அறிந்தேன். அவர் அந்த இணைப்பை எனக்கு அனுப்பி ‘நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். ‘ என் பட்டியலே வேறு. இது பொதுவான மனநிலையுள்ளவர்களுகுப் பயனளிக்கலாம். சிறிதளவேனும் நுண்ணுணர்வை வளர்த்து விரித்துக்கொண்டு அதில் பயணிக்க இயலும் எவருக்கும் இது எவ்வைகையிலும் பொருந்தாது’ என்று புன்னகைத்தவாறே பதிலளித்தேன். அந்த நுண்ணுணர்வையும் அதைப் பேணுதலையும் தொடர்ந்து வலியுறுத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன்
நா. சந்திரசேகரன்
சென்னை
100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96. நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


