உலக இலக்கியக் கொண்டாட்டம்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக இலக்கியம் குறித்து ஏழு நாட்கள் தொடர் உரைகள் நிகழ்த்தினேன்.சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நிற்க இடமில்லாத அளவு கூட்டம். மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த உரைகள் தனியே டிவிடியாக வெளிவந்து ஆயிரக்கணக்கில் விற்பனையாகியது. உரையின் வடிவம் நூலாகவும் வெளியானது





அது போன்ற தொடர் உரைகளை மறுபடியும் நிகழ்த்த விரும்பினேன். அதற்கான காலமும் சூழலும் அமையவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது. ஆகவே ஒரு வார காலம் தொடர் உரைகள் நிகழ்த்தலாம் எனத் திட்டமிட்டேன்.





ஒரு வார காலத்திற்குப் பெரிய அரங்குகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு ஹோட்டல் அரங்குகள் தரத் தயாராக இருந்தார்கள். ஆனால் அதன் கட்டணம் ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக வந்தது. இது போன்ற நிகழ்வுகளுக்கு எனது கைப்பணத்தை செலவு செய்து தான் நடத்த வேண்டும். எவரது நிதி ஆதரவும் கிடையாது. ஆகவே பொருளாதார நெருக்கடியான இந்த சூழலில் ஒரு லட்சம் ரூபாய் அரங்கிற்கு கொடுக்க இயலாது, மேலும் கொரோனா கட்டுபாடுகளை முறையாக கடைபிடித்து நிகழ்வினை ஏற்பாடு செய்வது சிரமமான விஷயம் என்று தோன்றியதால் ஸ்ருதி டிவி மூலம் இதனைப் படம்பிடித்து ஒளிபரப்பு செய்யலாம் என முடிவு செய்தேன்





ஸ்ருதி டிவி கபிலன் உடனடியாக இதனை ஏற்றுக் கொண்டு நிகழ்வுகளைப் படமாக்கினார். நிகழ்வின் ஒரு உரையை மட்டும் நண்பர் ஜீவ கரிகாலன் புதிதாகத் துவங்கியுள்ள பி பார் புக்ஸ் புத்தகக் கடையில் நிகழ்த்தினேன்.





ஏழு உரைகளையும் ஸ்ருதி டிவி மிகச்சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்தார்கள்.





ஒளிப்பதிவாளர் கபிலன்,சுரேஷ், ஹரி பிரசாத். அன்பு கரண் , மணிகண்டன், அகரமுதல்வன், ஜீவகரிகாலன் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





இந்த உரைகளை ஜனவரி -1, 2021 வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி -7 வியாழன் வரை ஒரு வார காலம் ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள்.





புத்தாண்டு முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு இலக்கியப் பேருரைகள் ஒளிபரப்பு செய்யப்படும்.









ஸ்ருதி டிவி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்





நிகழ்வினைக் காண :https://www.youtube.com/c/ShrutiTv





ஏழு நாட்கள் உரைகளின் விபரம்





ஜனவரி 1 மாலை 6 :30 ஹெர்மென் மெல்வில் – “ மோபிடிக்









ஜனவரி 2 மாலை 6 :30 நிகோலாய் கோகோல் – “தாரஸ் புல்பா“









ஜனவரி 3 மாலை 6 :30 சோபாக்ளிஸ் – “ஈடிபஸ் அரசன்“









ஜனவரி 4மாலை 6 :30 ஐசக் பாஷவிஸ் சிங்கர் -“ கிம்பல் மற்றும் கதைகள்









ஜனவரி 5 மாலை 6 :30 ஸ்டிபான் ஸ்வேக் –தி ராயல் கேம்“









ஜனவரி 6 மாலை 6 :30 ஜாக் லண்டன் – “கானகத்தின் குரல்









ஜனவரி 7 மாலை 6 :30 இதாலோ கால்வினோ – “புலப்படாத நகரங்கள் “













உலக இலக்கியப் பேருரைகள் குறித்த தகவலை அனைவருக்கும் கொண்டு செல்லும் விதமாக உங்கள் முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து உதவுங்கள்.





தொடர்புக்கு :





தேசாந்திரி பதிப்பகம்





CALL US
(044) 236 44947
(+91) 9600034659





https://www.desanthiri.com/

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2020 04:08
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.