அருட்செல்வப் பேரரசன் மொழிபெயர்த்த மஹாபாரதத்துக்கு ஒரு வெளியீட்டு விழா வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சில நண்பர்கள் கூட இருந்தனர். நான் எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவதுதான் என் நண்பர்களின் வழக்கம். அந்த நண்பர் குழாமில் அப்போது இன்னொரு நண்பரும் இருந்தார். அவர் தீவிர இந்துத்துவச் சார்பு உள்ளவர். என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவர் என்பதால் அரசியல் தவிர்த்து மற்றவற்றைப் பேசிக் கொண்டிருப்பேன். சுவாரசியமாகப் பேசுபவர். விஷயதாரி. சமய இலக்கியம், பழைய கால ...
Read more
Published on November 09, 2020 19:52