
Corsier-sur-Vevey. வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட்டைப் பிரிண்ட் எடுத்து ஒரு மலர்ச்செண்டுடன் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் துணைக்கு வந்திருந்தார்.
சாப்ளின்பால் நான் மொத்தமாக விழ சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட் ஒரு காரணம். சக மனிதர்களுடன் பழகுகையில் நாம் பல முகமூடிகளை அணிகிறோம், வேடங்களைப் போடுகிறோம், பாத்திரங்களை ஏற்கிறோம். நம்முடைய சுயம் என்று நாம் நினைக்கும் அந்தரங்க இயல்புக...
Published on November 08, 2020 04:56