காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்கு பாரிக்கின் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை மீள்வாசிப்பு செய்தேன். காந்தியின் மீது ஒரு மிக முக்கியமான விமர்சனத்தை பாரிக் வைக்கிறார். திலகர், அரவிந்தர், சாவர்க்கர் போல் இந்து மதத்தின் அடிப்படையில் இந்திய ஒற்றுமையைக் கற்பனை செய்யாமல், காந்தி இந்தியாவை பன்முக வரலாற்றுப்பார்வையோடு அணுகினார். பல்வேறு மத, இன, மொழியடையாளங்களின் கூட்டுத்தொகுப்பாகத்தான் இந்தியாவை அவர் கண்டார். ஆனால் அந்தக் கூட்டுத்தொகுப்பின் இயல்பை விளக்கும்போது அவரிடம் இந்துச் சாய்வு இருந்தது என்க...
Published on October 02, 2020 11:03