சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் எனக்கு ஒரு கடிதம் எழுதி தான் ஒரு நாவல் எழுதியிருப்பதாகவும் அதை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார். ஐயோ, அசோகாவை முடிக்கும் வரை (மார்ச்) என்னால் எந்தப் பக்கமும் திரும்பக் கூட முடியாதே என்றேன். நான் தான் அவரது ஆதர்சம் என்று அதற்கு முன்பே கூட சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவர் விடவில்லை. நாவல் 150 பக்கம், வெறும் ஐந்து பக்கத்தைப் படித்தால் கூடப் போதும் என்றார். ...
Read more
Published on October 08, 2020 04:15