அன்பு சாரு சார், முதலில் உங்களிடம் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய பூச்சி கட்டுரை படித்தவுடன் ஒருவித குற்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அரூ இதழில் வெளிவந்த தங்களின் நேர்காணல் பற்றி எதிர்வினை வரவில்லை என்று எழுதியதுதான் அந்த குற்ற உணர்விற்குக் காரணம். நான் படித்தவுடனே உங்களுக்கு நன்றி தெரிவித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நள்ளிரவில் வாசித்துமுடித்ததால் எழுதமுடியவில்லை. அதை அப்படியே மறந்தும் போய்விட்டேன். இன்று பூச்சி கட்டுரையில் குறிப்பிட்டவுடன் குட்டுவிழுந்தது போல் முழிப்புவந்து எழுதுகிறேன். ...
Read more
Published on July 21, 2020 23:23