ஊமைச் செந்நாய்: Jemo சைவமா? அசைவமா?

[image error]“ஊமைச் செந்நாய்” – ஜெமோ நாவல் -ன்னு மட்டும் நினைச்சிக்காதீங்க:)

சங்கத் தமிழில் உள்ள விலங்கு;

பாலை நிலத்து வேட்டையாடி விலங்கு! – காதே அம்புட்டு பெருசா.. பயமா இருக்கும்!


மலையோரக் கிராமத்துக் காடு/புதர்களில் காணலாம்; காட்டு நாய்;

தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, பெரிய மாட்டையே கூட அடிச்சீரும்;  ஆனா ரொம்பத் திங்காது; அதான் வேட்டைக்கு உதவி;

Type Typeஆ சத்தம் போடும் –  அழுகை, கேவல், சீழ்க்கை-ன்னு; வேட்டை விலங்குகளில் Mega Star:)


குறுகலா முகம், கருப்பா மூக்கு, பழுப்பாக் கண்ணு;

பார்த்தாலே சொல்லீறலாம்;  கடிச்சிக் குதறும் அசைவப் பிராணி -ன்னு:)  

= டேய், அது எப்படிறாச் “சைவமா” மாறும்?:)


அட, நான் சைவத்தில் இருந்து அசைவமா மாறலீயா? அது போல Reverse:)

அம்மா வறுக்கும் மீனுக்குத் தனி மவுசு;

ஆனா, நான் சமணப் பள்ளியின் பாதிப்பால் 14 வருசமாச் சைவமாக் கிடந்தேன்;

வந்து மாத்தினான் ஒருத்தன்!  வந்தே -ஏ-மாத்தறம்:)


ஆனா, இந்தச் செந்நாய்…., காதலுக்காகச் சைவமா மாறிடுச்சாம்!

அடா, அடா, அடா – பார்ப்போமா =  சைவக் காதலா? அசைவக் காதலா?:)



நூல்: ஐங் குறு நூறு (397)

குறுந்தொகையை விடச் சிறிது; min just 3 lines


கவிஞர்: ஓதலாந்தையார்

(ஓதல் என்னும் ஊரிலே, ஆதன் தந்தை = ஆந்தை)


திணை: பாலை

துறை: உடன்போக்கு


கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை

குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;

சுரம் நனி வாரா நின்றனள்’ என்பது,

முன்னுற விரைந்த நீர் மின்

இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!


சூழல்:

உடன் போக்கு = அதாங்க பொண்ணு, அவனோட ஒடிப் போயிட்டா:)

சங்கத் தமிழில் ஒடிப் போறதுக்கு, என்ன அழகான சொல்லு-ல்ல?:)


என்ன தான் அவன் பக்கத்தில் இருக்கும் போதும், பொறந்த வீட்டுப் பாசமும் கூடவே!

வீட்டில் தேடுவாங்களோ? -ன்னு கிடந்து அடிச்சிக்குது;

வழியில், தன் ஊருக்குப் போறவங்களைப் பார்த்து, “பயப்பட வேணாம்-ன்னு சொல்லுங்க” -ன்னு சொல்லி வுடறா!



காபி உறிஞ்சல்:


[image error]கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை

குருளைப் பன்றி கொள்ளாது கழியும்;


கவிழ்ந்த மயிருள்ள கழுத்து; ஆண் செந்நாய் (ஏறு)

அது, வழியில், பன்றிக் குட்டியைப் பாக்குது; ஆனாலும் கொல்லாமல் விட்டு விடுகிறது; ஏன்?


(குருளை = பன்றியின் சிறுசைக் குருளை-ன்னு தான் சொல்லணும்; தொல்காப்பிய மரபியல்!

யானைக் கன்று, குதிரை மறி, பன்றிக் குருளை, அணில் பறழ்…


ஆண் மயில் = போத்து, பெண் மயில் = அளகு… இதெல்லாம் மரபியல்;

ஆனா நாம இப்பல்லாம் மனுசப் பொண்ணுங்களையே, குட்டி -ன்னு தான் சொல்லுறோம்:)


ஏன், கொல்லவில்லையாம் அந்தச் செந்நாய்?

முந்தைய பாட்டில் விடை இருக்கு = “மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்

பெண் மான் – ஆண் மான் காதல்; கூடவே அந்தக் காதலுக்கு சாட்சியாப் பொறந்த மறி மான்;

இந்த இளங் குடும்பத்தைப் பாத்துட்டுச், செந்நாய்க்கே மனசு வரலையாம்!


[image error]சுரம் நனி வாரா நின்றனள்’ என்பது

முன்னுற விரைந்த நீர் மின்

இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே


காட்டிலே, போய்க்கிட்டு இருக்கா, காதல் வாழ்வு தொடங்க!

பயப்பட வேணாம்; பின்னாடி வருவா -ன்னு சொல்லுங்க!


நீங்கள் என் ஊருக்குத் தானே போறீங்க? சற்று விரைந்து போய்ச் சொல்றீங்களா?

யாரு கிட்ட? = என் ஆயத்தார் / மன்றத்து வீட்டார்; முறுவல் புன் சிரிப்போட சொல்லுங்க!


ஏன் புன் சிரிப்போட சொல்லச் சொல்லுறா?

அங்க தான் பொறந்த வீட்டுப் பாசத்தையும் மீறிப், புகுந்த வீட்டு மோகம்:)


டேய், என் ஆயத்தானுங்களா! என் அத்தான் கூடப் போறேன்!

வழியில், இந்த ஊமைச் செந்நாய் கூடக், குடும்ப அன்பை மதிச்சிக், கொல்லாம நிக்குது;

அதே போலக் காதலை எதிர்க்காது, நீங்களும் அன்பில் நில்லுங்க!


= சொல்லாமச் சொல்லுறா; அதான் புன்சிரிப்பு, பெண் சிரிப்பு:)

= இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே!


dosa 105/365

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2012 19:00
No comments have been added yet.


Kannabiran Ravishankar's Blog

Kannabiran Ravishankar
Kannabiran Ravishankar isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Kannabiran Ravishankar's blog with rss.