சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா? எனில், யார்?
[image error]சங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே!
புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை!
= 10 Avtars/ 12 Hands
= இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை!
என்ன ஆதாரம்? என்ன தரவு??
“கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது!
அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:)
“விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் சில பெரியவா, தய்யா-தக்கா -ன்னு குதிச்சாங்களாம்:)
Okies; I am Very Sorry! But.. என்ன தான் குதிச்சாலும்.. விநாயகரைச் சங்கத் தமிழில் கண்டுபுடிக்க முடிஞ்சுதா? இல்லை தானே? அதான் உண்மை:)
Matter is Very Simple!
*இன்றைய நிலை வேறு; தொன்மம் வேறு!
*இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!
இந்தப் புரிதலே போதும்!
உங்களுக்கு இன்னிக்கி புடிச்சிருக்கு என்பதற்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாது!
*உங்க தனிப்பட்ட விநாயக வழிபாட்டை “இழிவு” செஞ்சா, அது தப்பு.
*ஆனா, “சங்கத் தமிழில் விநாயகர் இல்லை” -ன்னு எழுதினா? தப்பு அல்ல; அது தொன்மவியல்!
தமிழ் நிலத்தின் இறைத் தொன்மம் = “நடுகல்”!
[image error][image error]தமிழ் முன்னோர் தலைவர்கள், தங்கள் ஆதிகுடிகளைக் காத்த நினைவாக = கல் சமைத்துப் போற்றுவது= நடுகல்! நீத்தார் பெருமை! அதுவே இறைமை!
“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்!
கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!
முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)
= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!
கந்தன் = இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் = இவன் “விஷ்ணு” அல்ல!
இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.
சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை)
* முல்லை = காட்டின் அடர் “கருமை” = மாயோன்[image error]
* குறிஞ்சி = மலை உச்சியின் “சிவப்பு” = சேயோன்
மால் = தங்கள் கண்ணுக்குப், பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, “மால்” என்று ஆதித் தமிழர்கள் வழுத்தினர்“ – திரு.வி.க ஆய்வுரை!
மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” – ஈழத்து அறிஞர் கா. சிவத்தம்பி!
முருகு = பெண்கள் மேல் இறங்கும் ஒரு “ஆவி”த் தெய்வம் என்பதே சங்க மரபு!
“வேலன் வெறியாடல்” என்கிற நாட்டார் பூசை;
வெறியாடிகளின் மேல் ‘முருகு’ இறங்கல்; ஆட்டுப் பலி, “சூர் மடிதல்” -ன்னு பழங்குடி வழக்கம்.
கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்!
தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..
கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்; அதுவே, கந்து + அன் = கந்தன்!
வள்ளி = கந்து (எ) கல்தூணில் படரும் வள்ளிக் கொடி!
[image error]இது முன்னோர்களின் காதல் வாழ்வுக்கு அடையாளம்;
(மறைந்து விட்ட) தலைவன் – தலைவி = நடுகல்லும், அதில் படரும் கொடியுமாய்!
= கொடிநிலை, கந்தழி, வள்ளி (தொல்காப்பியம்)
நினைவு போற்றுதல்! அன்பே தெய்வம்! இயற்கை வாழ்வு! புராணங்கள் இல்லை.
நடுகல்லு வச்ச இடத்தில், ஒரு காதல் காட்சி பார்க்கலாமா? வாங்க..
அவளுக்கு அவன் மேல் “மிக்க” அன்பு! ஆனா, அவனோ அவளைக் “கண்டும் காணாதது” போல் இருக்கான்.
தன் காதலை வாழ்விக்க முடியாம, அவ என்ன பண்ணுறா? = தற்கொலை? இல்லையில்லை!
சூர் நசைத் தலையாய் “நடுகல்” கண்டே
பரிந்தனென் அல்லனோ, இறை இறையானே
[image error]முன்னோர்களே, நீங்க தூக்கி வளர்த்த இவனுக்கு..
நீங்களே என் அன்பையும் புரிய வைக்கக் கூடாதா?”
-என்று, நடுகல்லையே அவ வணங்குறா!
தன் முன்னோர் மரபின் மேல், அவ கொண்ட மதிப்பு!
அந்த மதிப்பால், அவன் மதிப்பில் அவ உசந்துட்டா;
அவன் அவளைப் புரிஞ்சிக்கிட்டான்; இதழ் இழுத்து உறிஞ்சிக்கிட்டான்; இதுவே மாமூலனாரின் குறுந்தொகைப் பாடல்!
இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய “லிங்கம்” போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள்:)[image error]
ஆனால், அன்றைய தமிழில் “ல” -ன்னே எழுத்து தொடங்காது; லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்!
லிங்கம் = வடமொழி; தமிழில் எழுதும் போது = இலிங்கம்!
அப்புறம் எப்படி நடுகல் = “லிங்கம்” ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்று; “மதம் ஆன பேய்” வந்து ஊடாடினால்? = இதான் கதி:(
தொல்காப்பியர் காட்டும் நடுகல் = “சீர்த்தகு மரபு”
காட்சி, கால்கோள், நீர்ப்படை, “நடுகல்”
சீர்த்தகு “மரபில்“ பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)
இந்த “மரபு” தான் -> தமிழ் மரபு என்று ஓங்கி வளர்ந்தது!
* முன்னை “மரபின்” முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் “மரபின்” பெரும்பெயர் முருக = முருகன்
கலப்பின் காலம்:
வணிகம்-தொடர்பு காரணமாய், வடமொழி (எ) வடநெறி, தமிழ் நிலத்தின் ஓரமா வந்து குந்திக்கிட்டு இருக்கு! இது தொல்காப்பியருக்கும் தெரியும்! அதான் “வட எழுத்து ஒரீஇ” (ஒதுக்கு) -ன்னு எழுதினாரு!
பண்பாடுகள் சற்று கலக்கத் தான் செய்யும்!
யாரும் தனித்து வாழவியலாது; ஆனால்.. ஆனால்…
அப்படிக் கலக்கும் போது,
* ஒரு சமூகம், தன் “வேர்”களை இழந்து விடக் கூடாது!
* மரியாதையுடன் கூடிய கொடுக்கல்-வாங்கல்; அதுவே நல்லது!
[image error]தமிழில், 5% பிற மொழிச் சொல் Okay;
ஆனால் 35% சம்ஸ்கிருதச் சொல் புகுத்தினால்?
Parasite போல்… ஒட்டி ஒட்டியே, உறிஞ்சி இழுத்து விடும்!
“சொல்/பொருள்” என்ற சொற்களே நாளடைவில் மறைஞ்சிப் போய்..
“வார்த்தை/அர்த்தம்”-ன்னே புழக்கம் ஆயீரும்!
ஆங்கிலமாச்சும் பரவாயில்லை, “பிகர்”-ன்னு எழுதினா, உங்க பாட்டி கூட Figure என்பது இங்கிலீஷ்-ன்னு சொல்லீருவாங்க:)
ஆனா சம்ஸ்கிருதச் சொற்கள்: “வார்த்தை/அர்த்தம்”?
அதுவும் தமிழ் தானோ? எ. நம்மையே நம்ப வைத்துவிடும் தலைமுறைத் தீமை, இந்த Parasite தீமை!
நம்மிடம் இல்லாத சொற்களை, பிற மொழிகளில் இருந்து பெற்றுக் கொளல் தவறில்லை.
ஆனால் இருக்கும் சொல்லை/சொத்தை அழித்து, கடன் வாங்குதல் அறிவீனம் அல்லவா?
தொல்காப்பியர், வடசொற்களும் தமிழில் புழங்க flexibility (எ) நெகிழ்வு குடுத்தாரு.
எடுத்துக்காட்டு:
*கமலம்= தற்சமம் (அப்படியே எழுதுவது)
*பங்கயம்= தற்பவம் (பங்கஜம்: தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, பங்கயம் என்று மாற்றி எழுதுவது)
இந்த Flexibility பெயர்ச் சொற்களுக்குச் சரிவரும்! ஆனா இதையே எல்லாத்துக்குமே நுழைக்கப் பார்த்தால்?
[image error]அரசர்கள்-அதிகாரம் மூலமா ‘நுழைந்து’ கொண்டது வடநெறி! “மதம்” என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருக்கே? Emotional Attack!
“உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு”
இப்படில்லாம் சொன்னா, எதுக்கு வம்பு.. உண்மையோ/பொய்யோ.. கொடுத்துத் தொலைச்சிருவோம் என்று செய்வீர்கள் தானே?:)
பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி = பாவம்
பாவத்தை ஈடு கட்டணுமா? = புண்யம்
ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் = இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது!
* முது குடிப் பெருவழுதி -> பல் “யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆனான்!
* பெருநற் கிள்ளி = இராஜசூய யாகம் வேட்ட பெரு நற் கிள்ளி -ன்னு மாறிட்டான்!
[image error]அரச/ அதிகாரப் பரவலே முதலில்;
பின்பே இலக்கிய/ சமூகப் பரவல்!
ஆம்!… அது கடைச்சங்க காலம்!
கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:(
முல்லை-குறிஞ்சி என்ற ஆதிகுடி காட்டு வாழ்க்கை!
புலம் பெயர்ந்து..
மருதம் என்ற வயல்வெளி/ ஆற்றோர நாகரிகம் கண்ட மக்கள்.
நாகரிகம் செழிக்கச் செழிக்க, “அந்நிய நெறிகள்” நுழைந்து, தமிழ் நிலத்தை மாற்றிப் போட்டது!
பண்பாட்டுக் கலப்புக்குப் பின்…
அரசனைக் ‘கொண்டது’ போல், ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிக் ‘கொள்வது’?
= வாழ்க்கையின் துன்பமெல்லாம் விலகி ஓடணுமா?
= பூஜா-புனஸ்கார-ஜோதிட-பரிகாரம்
ஜோதிட மயக்கம், நம் அப்பாவி மக்களுக்குப் பெரும் மயக்கம் அல்லவா?
(கண்ணகி கிட்டவும் பரிகாரம் செய்யச் சொல்றாங்க, இழந்த புருசனை அடைய; ஆனா அவள் செய்ய மறுக்குறா)
[image error]“Hello தமிழ் மக்களே.. [image error]
உங்க முருகனும், திருமாலும், இங்கேயும் இருக்கா பாருங்கோ! எங்க சம்ஸ்கிருதத்திலும் இருக்கா பாருங்கோ!
வெறுமனே நடுகல்லா இல்லாம… Magic; ‘ஜாலி’ யான புராணக் கதைகள்”?:)
தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..
இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ்க் கடவுள்களையே -> புதிய புராணக் கடவுள்களாக உருவாக்கம்!
Local பாணியில் பேசிப் பேசியே, Local மக்களைக் கவரும் அன்றைய “பிராமண சுவிசேஷம்”:)
* கந்தன் -> ஸ்கந்தன் ஆனான்!
* திருமால் -> விஷ்ணு ஆனான்!
தமிழ்த் தொன்மங்களின் மேலேயே, பலதும் ஏற்றப்பட்டன.
நம் தொன்மங்களை, நாமே இழக்க வைக்கும் “உத்தி” = புராணம் ஏற்றுதல்!
இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?
பிரபலம் ஆகாத வரை= அவள் எளியோரின் சமயபுரத்தாள்!
ஆனால் கொழிக்கத் துவங்கியவுடன்= அர்ச்சகாள் வந்துட்டா!
“ஆத்தாள்” -> “அம்பாள்” ஆகி, தல “புராணமும்” இப்போ வந்துருச்சு அல்லவா? அதே உத்தி!
நமக்கும்.. ஆத்தாளை விட, அம்பாள் என்று சொல்வதே, Promotion அடைந்த திருப்தி:(
சிறு தெய்வம்= நம் தாழ்வு மனப்பான்மை!
அதையே மந்திரம் சொல்லிக் கொண்டாடினால்? பெருந் தெய்வம்= உயர்வு மனப்பான்மை!
உங்க நடுகல் முருகனும்/திருமாலும், Sanskritலயும் இருக்கா பாருங்கோ!
*முருகன் aka சுப்ரமண்யன்= கம்மி
*திருமால் aka விஷ்ணு= சற்று அதிகம்
[image error]“விஷ்ணு”வை அங்கே அதிகம் பரவிட்டாங்க; மும்மூர்த்தியுள் ஒரு மூர்த்தி.
மோகினி + கிளுகிளு கதைகள்!
“ஸ்கந்தனை”, ஏனோ அங்கு அதிகம் பரவலை; மும்மூர்த்தி ஆக்கலை;
ஆனாலும், சுப்ரமண்ய ஸ்வாமி, தேவ ஸேனாபதி என்ற பட்டம்!
*அங்கு அதிகம் பரவாதவன் மட்டுமே = “தமிழ்க் கடவுள்” முருகன் -என்று இன்றைய கண்ணுக்குத் தெரிகிறான்;
*ஆனால், முருகனும் திருமாலும்= இருவருமே தமிழ்த் தொன்மங்கள் -என்று சங்கத் தமிழ்க் கண்ணுக்கு நல்லாவே தெரியும்!
முருகன்= தமிழ்க் கடவுள் என்று சைவப் பெருமைக்கு, இன்று சொல்லிக் கொண்டாலும்..
அந்தத் தமிழ்க் கடவுள் கதை பூராவும்= சம்ஸ்கிருத/புராணக் கதையாய் இருப்பது ஏன்?
(நெத்திக் கண்ணுல தோன்றினாரு, 6 ஒடம்பு ஒன்னாச்சு, கைலாஸ மலையில் பழம் நீ அப்பா, பிரணவ மந்திர உபதேசம்;
வீரபாஹூ Friend ஆனாரு; பாஹூ= சம்ஸ்கிருதம்; தோள் எ. பொருள்! அப்பறம் எப்படித் தமிழ்க் கடவுள்?:)
அசுரர் குடியையே கெடுத்தாரு, அசுரர் “குடிகெடுத்த” ஐயா வருக; தூங்கும் குழந்தைகள் உட்பட அசுர பட்டணத்தையே தண்ணிக்குள் மூழ்கடிச்சாரு, தேவஸேனா கல்யாணம்)
“தமிழ்க் கடவுள்” முருகன் மேல், ஏன் பூராவும் சம்ஸ்கிருதக் கதைகள்?
இந்த எளிய உண்மை= நம் மக்களுக்கு உறைப்பதே இல்லை!:) அதான் மதம் என்கிற மாயை!
மேலும் பேசுவோம்!
தங்கள் நடுகல்லும்/தொன்மமும் = “பெருந்தெய்வமாய்” மாறிப் போச்சு;[image error]
அப்போ ஆதி குடிகளின் கதி?
= கொல்லிப் பாவை, இசக்கி, சுடலை, சாத்தன்-சாத்தி…
இப்படி, முன்னோர்களை, வேறு வேறு பெயரில், வழிபட்டுக் குறுகிப் போயினர்!
(சாத்தன்-சாத்தி என்கிற தமிழ்ப் பெயர்கள்: சீத்தலைச் சாத்தனார், ஒக்கூர் மா-சாத்தியார்)
மக்களும் “மாற”த் துவங்கியாச்சி..
அட, நம்ம முருகன் தானே, அங்கேயும் சுப்ரமண்ய ஸ்வாமியா இருக்கான்?
கூடவே கிளுகிளு கதைகள்!
கல்யாண + வியாபார பரிகாரங்கள் -ல்லாம் சொல்றாங்களே, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு?
மன்னன் முதற் கட்ட மாற்றம்! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி..
அரசியல் அதிகாரம் பெருக்கி, மக்கள் இரண்டாம் கட்ட மாற்றம்!
அரசியலும், தன்னலமும்.. எதையும் செய்யும்!
முருக-“இயற்கை” வழிபாடு குறுகி -> முருக-“புராண” வழிபாடு பெருகியது!
பொய்யான “கதைகளே” மலிந்து போய்,
இன்று, ஆலயம் தோறும்.. முருகத் தமிழ்க் கடவுள் & திருமால் தமிழ்க் கடவுள் -> சம்ஸ்கிருதக் கடவுள் ஆகி நிற்கும் கோலம்!:(
சமணம் & பெளத்தம்:
[image error]இவை கூட வடக்கில் இருந்து வந்த நெறிகள் தான்!
ஆனா அவர்கள் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்கலை; “புது நெறி”-என்றே அறிமுகம் செய்தார்கள். கந்தனை -> “ஸ்கந்த தீர்த்தங்கரர்” ஆக்கலை!
சம்ஸ்கிருத நெறி மட்டுமே = தமிழ் மரபியல் சிதைப்பு செய்தது.
தொன்மத்தின் மேலேயே புராணம் ஏற்றினால்?
= எது இருந்தது? எது வந்தது?
= கண்டுபுடிக்கவே முடியாது! Thatz the Trick! Ir-reversible:(
இயற்கையான முருகனுக்கு = 6 தலை, 12 கை, 18 கண்:)
நாமளும், ஆறு-தலை/தரும் ஆறுதலை -ன்னு “வார்த்தை விளையாட்டு” விளையாடி, மகிழ்வு கொண்டு விடுகிறோம்; வெட்கக்கேடு:(
சென்னைக்கு அருகே திருப்போரூர்;
இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்னிக்கும் நடுகல்லைப் பார்க்கலாம்!
உருவமோ/முகமோ இருக்காது;
ஆனா முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைச்சிருக்கும்!
யாரேனும், “ஹிந்து” மத அபிமானிகள் வாசிக்க நேர்ந்தால் மன்னித்து விடுங்கள்.
உங்களுக்குப் “பிடிக்கலை” -ன்னு தெரியும். அதுக்காக, தொன்மத்தை மாத்தி எழுதீற முடியாதே?
வசையாடி/இழிவு செய்தால் கோச்சிக்குங்க; ஆனால் சங்க கால உண்மைக்கெல்லாம் கோச்சிக்காதீக, Please!
மனசாட்சி இருப்பின், நீங்களே யோசிங்களேன்.
* சமண-பெளத்தம் = பாளி மொழி -> அதன் கலப்பு தமிழில் இருக்கா?
* வேத/ பிராமணீய மதம் = சமஸ்கிருதம் -> ஏன் இது மட்டும் அதீதக் கலப்பு?
அவரவர் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்:)
சங்கத் தமிழ் வாசிப்புக்கு = “காலம் அறிதல்” இன்றியமையாதது!
[image error]கொஞ்சூண்டு புற400 பாட்டில்… பஞ்ச பாண்டவர், இராமன் + இதர தெய்வங்களின் குறிப்பு கூட வரும் (மிகச் சொற்பமாக)
ஒடனே, “பாத்தீங்களா பாத்தீங்களா? சங்கத் தமிழ்லயே ராமர் இருக்கார் பாருங்கோ; பேஷ் பேஷ்!
தமிழாள் ஸ்ரீ-ராமரையே கும்புட்டாங்க! Bolo, Jai Sri Ram!” -ன்னு எறங்கீறக் கூடாது:)
அப்படீ-ன்னா, “Sati” = தமிழாள் பண்பாடா என்ன?:) மாண்ட கணவனோடு, பெண்ணை நெருப்பிலே தள்ளல்! அதுவும் புற400-இல், ஒரு மூலையில் லேசா வரும்:([image error]
இதுக்குத் தான் காலம் அறிதல் முக்கியம் -ன்னு சொன்னேன்!
* முதல்/இடைச் சங்கத் தமிழில்= இது போன்ற “புராணக் குறிப்பு” வராது!
* கடைச் சங்க காலம் = கலப்புக்குப் பின்னரே, புராணம் லேசு மாசாய் வரும்!
இவை = “தொகை” நூல்கள்; தொகுக்கப் பட்டவை! ஒரே காலத்தி்ல் எழுதப் பட்டவை அல்ல!
*முதல்-இடைச் சங்கப் பாட்டும் வரும்
*கடைச் சங்கப் பாட்டும் விரவி வரும்
ஆனா, எதுஎது, எந்தக் காலம்? -ன்னு அகச் சான்று உண்டு!
என் iPod Playlist -இல், பாபநாசம் சிவன், KV Mahadevan, மெல்லிசை மன்னர் MSV, இளையராஜா, Rahman -ன்னு “தொகுத்து” இருக்கு! எல்லோரும் ஒரே காலமா என்ன?:)
MSV போட்ட “Melody”-க்கு, இன்னிக்கி Remix என்கிற “Tragedy” வேற:(
இதே போல், குறுந்தொகைக்கெல்லாம் “கடவுள் வாழ்த்து” -ன்னு Remix சொருகினார்கள்:(
நினைவில் வையுங்கள்:
எட்டுத் தொகையில்= 8 “கடவுள் வாழ்த்துச்” செய்யுள்களும், சைவ சமயப் பிற் சேர்க்கையே! Remix செய்யப்பட்டதே!
மக்கள் வாழ்வியல்:
[image error]*குறிஞ்சி: வெறியாடும் முருகன் கூத்து!
*முல்லை: காதலர்கள், மாயோன் (திருமால்) மேல் சத்தியம் செஞ்சி, காதலை நிரூபிப்பது!
-இப்படி.. “வாழ்வியல்” (Social Life);
ஆனால், (இல்லாத) நெற்றிக் கண்ணால் எரிப்பது? பரியை நரி ஆக்குவது?
இது மக்கள் வாழ்வியல் அல்ல; புராணம்!
“வடவரின் புதுக் கதையில் வருவது போல்” -ன்னே சங்கப் பாட்டும் இருக்கு; It’s just a “Myth”
காலம் செல்லச் செல்ல..
மதம் (எ) சக்தி வாய்ந்த ஆயுதம், “நிறுவனப்படுத்தல்” ஆகி விட்டது.
ஆனா அப்போதும், தமிழ்ச் சமூகம் = தன்னை “முழுசா” ஒப்புக் குடுத்துடலை, சம்ஸ்கிருத நெறிக்கு!
Kannagi is the Proof!
கலப்புக்குப் பின்னால் எழுந்ததே சிலப்பதிகாரம்!
கோவலன் திருமணமே = “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்” தான் நடக்குது;
அது காதல் திருமணம் அல்ல!
அரசனுக்கு இயைந்த, வணிகச் சமூகப் பெற்றோர் நடத்தும் திருமணம்!
பெற்றோர் சொற்படி, பார்ப்பனன் நடத்தி வைத்த திருமணமே ஆயினும், அதே கண்ணகி.. சடங்கு செய்ய மறுக்கிறாள்!
பிரிஞ்ச தம்பதிகள் பரிகாரம்:
பிரிந்து விட்டவனை மீண்டும் அடைய, சோம குண்டம்/ சூர்ய குண்டம் = பரிகாரம் பண்ணலாம் வாடீ-ன்னு… அவள் பக்கத்து வீட்டுப் பார்ப்பனத் தோழி தேவந்தி கூப்பிட..
கண்ணகி சொல்லும் தமிழ்நெறிச் சொல் = “அது எங்களுக்குப் பீடு (பெருமை) அன்று”!
பண்பாட்டின் பரவல் | Expansion of Civilization:
[image error]முல்லையின் மாயோன், குறிஞ்சியின் சேயோன்
= முதலில் வைக்கிறார் தொல்காப்பியர்;
= காடு-மலை; முதலில் தோன்றிய நாகரிகம் அல்லவா?
காடு-மலை கடந்து, மக்கள் புலம் பெயர்ந்த போது.. தங்கள் தொன்மங்களையும் உடன் எடுத்தே சென்றார்கள்! மருதம்= வேளாண்மை; நெய்தல்= கடலாண்மை கண்டனர்.
மருத நிலம் = வேந்தன் (அரசன்); மாறிக் கொண்டே இருப்பவன்
நெய்தல் நிலம் = வருணன்/ வருள்நன் (கடல்காற்று); மாறிக் கொண்டே இருப்பது
முருகன்/திருமால் போல்.. வேந்தனோ/காற்றோ = ஒரு நிலைத்த அடையாளம் அல்ல!
அதனால் மக்கள் வாழ்வியலில், வேந்தன்/வருணன் அதிகம் பேசப்படலை.
துறை/கூத்து -ன்னு வேந்தன்/வருணனுக்கு.. “வாழ்வியலாய்” ஒன்னுமேயில்ல; வெறும் நில அடையாளம் மட்டுமே!
[image error]கொற்றவை (எ) பழையோள் = இவளும் தமிழ்க் கடவுளே!
= நடுகல்லாய் உதித்து, உருப் பெற்றவள்!
= பாலை நில எயினர்கள்/ வழிப்பறிக் கள்வர்களின் தெய்வம்!
“நாகரிகம் குறைந்த” கள்வர் என்பதால்.. இவள் பேரிலே மிகுந்த இலக்கியப் பாடல்கள் இல்லீன்னாலும்..
திணை அளவில் இல்லாது, துறை அளவிலாச்சும் (கொற்றவை நிலை) குறித்து வைக்கிறார் தொல்காப்பியத்தில்! தொல்காப்பியர் பேதம் இல்லாதவர்; எவரையும் ஒதுக்காமல், “உள்ளது உள்ளபடி”.. தமிழாய்க் குறித்து வைக்கின்றார்!
மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்,
தாவா விழுப் புகழ் = “பூவை” நிலையும்
-ன்னு தொல்காப்பியர் சொல்லும் அந்தப் பூ-வை என்பதே => பூ-சை ஆனது;
இப்படி, இயற்கை வழிபாடாய் இருந்த ஒன்று..[image error]
* நாள் செல்லச் செல்ல, “புதிய புராணம்”= இலக்கியத்திலும் பரவத் துவங்கியாச்சு
* வேந்தன்= இந்திர பகவான், வருள்நன்= வருண பகவான் -ன்னு ஆக்கியாச்சு!
நினைவில் வைங்க; வேந்தன் = இந்திரன் அல்ல!
வேந்தன்= மருத நில மன்னவர்கள்; (மாறிக் கொண்டே இருப்பவர்கள்)
அதே போல் வருணன் = (வருள்நன்)
வருள்= சூழ்தல்; நிலத்தை வருளும் (சூழும்) கடல்!
முது “வருண்”, முந்து கிளவாச் செறிவு -ன்னு திருக்குறளே இருக்கு!
வருள்/வருண்= சூழ்தல்!
தமிழ் “வருணம்” வேற; சம்ஸ்கிருத “வர்ணம்” வேற;
வருள்வதால்= வருணன்; வருளும் கடற்காற்று= நெய்தல் நிலத் தெய்வம்!
ஆனால், வேந்தன் = இந்திரன் -ன்னு உரைகளில் மாற்றி எழுதினார்கள்:(
இந்திர விழா என்று மன்னனும் தோற்றுவித்தான்!
வேதக் கடவுள்கள் சோமன் /இந்திரனை, Local மதப் பரப்பலுக்காக “சற்றே ஒதுக்கி வைத்து”, ஹோமம்/ யக்ஞங்களில் மட்டும் இந்திரனை விட்டுவிடாது பிடித்துக் கொண்டனர்! ஓம் இந்திராயா ஸ்வாஹா.. யாகத்தில், இந்திரனுக்கு அவிர்ப்பாகம்!
உலகெங்கும், ஆஸ்திகம்= கடவுள் உண்டு; நாஸ்திகம்= கடவுள் இல்லை!
ஆனால் சம்ஸ்கிருத/ பிராமணீயக் கொள்கையில் மட்டுமே, ஆஸ்திகம்= வேதம் உண்டு; நாஸ்திகம்= வேதம் இல்லை!(கர்ம மீமாம்சை= இறை மறுத்து, ஆனால் வேதம் மறுக்காதவர்கள்)
வேதம் மறுத்த புத்தரும், மகாவீரரும்.. இவர்களைப் பொருத்த மட்டில்= நாத்திகர்கள்:)
நீ, இறைவனை மறுத்தாலும் பரவாயில்லை; எங்கள் வேதத்துக்கு உடன்பட்டால்= நீயும் ஆத்திகனே!
என்னே இறை அன்பு! கடவுளை விடவும், தங்கள் கட்டமைப்புக்கு உருவாக்கிக் கொண்ட வேதமே பெரிது!:)
அன்பை விடப் பெருங் கடவுளும் இலமே! -என்று பாடும் சங்கத் தமிழ் மாண்பு எங்கே? இச் சுயநலம் எங்கே?
Grammar = The Breeding Ground
தமிழ் இலக்கணமே= இவர்கள் முதலில் கை வைப்பது; Cut at the root!
(உங்க இலக்கணத்தைத் திரித்து, உங்களுக்கே வழங்கும் பண்டிதாள்)
* ஒரு புடை உருவகம் = “ஏக தேச” உருவகம் -ன்னு.. இன்னிக்கி பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்திலெல்லாம் நிலைச்சிருச்சே!
Why should Tamizh Grammar have “ek” & “ekam” inside it?
Does Sanskrit Grammar has, Tamizh words “Or & Eer (ஓர் & ஈர்)” in it? உங்க மனச்சாட்சியைக் கேளுங்கள்!
இது வடமொழி (எ) ஒரு தனிப்பட்ட மொழியின் குற்றமல்ல; அது நல்ல மொழி தான்.
அந்த மொழியில் ஊறிய, ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் குற்றமே இது!
[image error]Does Sanskrit have Tamizh sounds ழ & ற?
But Tamizh “MUST” have sanskrit sounds ஸ்ரீ & ஷ!
இது தானே “நியாயம்“?:) புகுத்து, தமிழில் கிரந்த எழுத்தை!
தமிழின் சிறப்பான ழ-க்குப் பதிலா, ட -போட்டுக்கலாம் ன்னு, தமிழ் இலக்கணத்தையே மாத்தி எழுதப் பார்த்தாங்க;
தமிழ்க் கடவுள் முருகனே வந்து “ழ”-க்குப் பதில் “ட” போடச் சொன்னான்-னு சைவக் கதையும் புனையப்பட்டது:) கச்சியப்ப சிவாச்சாரியின் கந்த புராணம்!
ஆனால், எத்துணை “சம்ஸ்கிருத/மதம்” மிகுந்தாலும், இன்று வரை… தமிழ் மொழி இயல் = தொல்காப்பிய அடிப்படையே! அதை எவரும் அசைக்க முடியலை!
காலங் காலமாய்ப் பின்னிப் பிணைந்து… இன்று வரை..
தொல்காப்பியமே காத்துக் குடுக்கும்= நம் தமிழ்த் தொன்மம்!
Further Read/Ref:
1) ஞா.தேவநேயப் பாவாணர் – தமிழர் சமயம்
2) தொ. பரமசிவன் – பண்பாட்டு அசைவுகள்
3) மா. இராசமாணிக்கனார் – கால ஆராய்ச்சி (ebook)
சரி, பெரீய்ய்ய முன்னுரை போதும்:) வாங்க, இன்றைய பாட்டுக்குச் சுருக்கமாய்ச் செல்வோம்:)
தமிழர்களுக்கு, நைவேத்யம் செய்யும் கடவுள்கள் இல்லை! என்ற தெளிவான எதிர்ப்புக் குரல்; சங்கத் தமிழிலேயே!
இது போல் பலப்பல அகச் சான்றுகள்!
நூல்: புறநானூறு (335)
கவிஞர்: மாங்குடிக் கிழார்
திணை: வாகை
துறை: மூதின் முல்லை
அடல் அரும் துப்பின்…..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
காபி உறிஞ்சல்:
[image error]அடல் அருந் துப்பின்…..
குரவே, தளவே, குருந்தே, முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
வெல்ல முடியாத வலிமை (துப்பு) கொண்ட இனம்;
* குரவம், தளவம் (பிச்சிப்பூ), குருந்து, முல்லை
= இந்த நான்குமே இவங்க குடிப் பூக்கள்;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;
வரகு, தினை, கொள்ளு, அவரை = இந்த நான்குமே இவங்க குடி உணவு;
[image error]துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
துடியன், பாணன், கடம்பன், பறையன் = இந்த நான்குமே இவங்க குடி முறைகள்;
அரசின் உயர் அலுவலர் = பறையன்; But today itz an offensive word;
எள்ளல் பேர்வழிகள் கும்மி அடித்து அடித்து, “பறையன்” என்னும் செந்தமிழ்ச் சொல், தீச் சொல்லாய் மாறி விட்டது:(
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின், களிறு எறிந்து வீழ்ந்தெனக்
பகைவர்களின் முன்னே அஞ்சாது நிற்பர்;
ஒளி வீசும் தந்தம் உள்ள யானை = அதையே சாய்க்க வல்லவர்;
அப்படிச் சாய்க்கும் போது, தாமும் சாய்ந்து இறந்தார்கள் = குடி காத்த முன்னோர்;
[image error]கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
அவங்க நினைவாக இட்ட = நடுகல்!
அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…
நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),
“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை! =நெல் உகுத்துப் பரவும் “கடவுளும் இலவே”!
(Strong Views recorded by maangudi kizhaar, during the “culture change” of his times)
இது போன்ற அகச் சான்று= பல சங்கத் தமிழ்ப் பாடல்கள்!
மன்னன் மாறினாலும்.. தான் மாறாது,
தமிழ்க் கொள்கைக்கு எதிரான.. சம்ஸ்கிருத/ வேத/ பிராமணீயம்; அவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்த்தமைக்குச் “சாட்சி”யாய்.. ஆங்காங்கு நிற்கும் சங்கத் தமிழ் வாழ்க!
dosa 106/365
Kannabiran Ravishankar's Blog
- Kannabiran Ravishankar's profile
- 16 followers
