முகம் விருது

எனக்கு ஓர் இலக்கிய விருது அளிக்கப்பட்டுள்ளது.குக்கூ என்னும் சேவை அமைப்பை நடத்திவரும் நண்பர்கள் அளிக்கும் முகம் விருது.அறம் சிறுகதைத் தொகுப்பிற்காக  இந்த விருது அளிக்கப்படுகிறது. வாழ்த்து மட்டும் அடங்கிய விருது.


இதுவரை யானை டாக்டர் கதையை மிக அதிகமாக வினியோகித்தவர்கள் குக்கூ அமைப்பினர். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக்கும் அடித்தள மக்களுக்கான கல்விக்குமாக ஆத்மார்த்தமாக சேவை செய்து வரும் நண்பர்களின் அமைப்பு இது.


நாள் : 27.12.2011,செவ்வாய் கிழமை மாலை 4 மணி


இடம் : அவினாசி அருகே உள்ள கோதபாளையம் கிராமத்தில் உள்ள திருப்பூர் காது கேளாதோர் பள்ளி .


திருப்பூர் காது கேளாதோர் பள்ளி .


இயல்வாகை சூழலியல் இயக்கம்


குக்கூ குழந்தைகள் நூலகம்


தொடர்புக்கு :9965689020, 9942118080 , 9994846491


http://www.thecuckoo.co.in/">...


http://www.facebook.com/cuckoochildre...


ஒரு கடிதம்


அன்புள்ள ஜெ.,


சமீப காலமாக ஒரு வழக்கம் வைத்திருக்கிறேன்… ஏதாவது வேண்டுதல் என்றால், கோவிலுக்கு நேர்வது போல், ஏதாவது நற்பணி அமைப்புக்கு ஒரு தொகை அளிப்பதாக உறுதி செய்துகொள்வேன்.


இதை விரிவாக்கி, தொடர்ந்து இது போல் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறேன்.


என் பிரச்னை என்னவெனில், எப்படி அது போன்ற அமைப்புகளைக் கண்டுணர்வது. பல்வேறு மோசடிகள் நடக்கும் "தொழிலாக' இதைப் பலர் நடத்துகிறார்கள்.


உங்களுக்குத் தெரிந்த அமைப்புகள் எதுவாயினும் இருப்பின் சொல்ல முடியுமா? அது பொது நலத்திற்காக, எந்த வகையில் பணியாற்றும் அமைப்பாக இருப்பினும் சரிதான்.


பிகு: பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவது தவறுதான். இருப்பினும் something is better than nothing என்ற வகையில் கேட்கிறேன்.


நன்றி

ரத்தன்


அன்புள்ள ரத்தன்


இந்த அமைப்பை நான் சிபாரிசு செய்கிறேன்


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

கடிதங்கள்
கடிதங்கள்
அறம் வாழும்-கடிதம்
யானை- கடிதம்
யானைடாக்டர்-ஓர் உரை
வாழும் கணங்கள்-கடிதங்கள்
இலங்கையில் இருந்து ஒரு கடிதம்
யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்
அசடன், யானைடாக்டர்- கடிதங்கள்
யானைடாக்டர் இலவச நூல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.