எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது....
09.01.2018 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நேருக்கு நேர்” நிகழ்ச்சியினை இணையத்தில் இன்று பார்த்தேன். தம்பி கரு.பழநியப்பன்தான் Karu Palaniappan சிறப்பு விருந்தினர்.மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பையப் பையக் கைப்பற்றுகிறது என்று பழநியப்பன் அழுத்துகிறார். மைய அரசு மெல்ல மெல்ல மாண்புமிகு எடப்பாடி பழநிச்சாமி அவர்களின் உரிமைகளையும் வேலைகளையும் ஆளுநர் மூலமாக கைப்பற்றத் தொடங்கி இருப்பதாக பழநியப்பன் கூறுகிறார்.இப்படியாக நேர்காணல் மெல்ல மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் அத்துமீறி தலையிடுவதைக் குறித்து நகர்கிறது.அவரும் சேர்ந்துதனே மாநில அரசு. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர்தானே மாநில அரசின் தலைவர். அப்படி என்றால் அவரது தலையீடு என்பது நியாயமானதுதானே என்பதுமாதிரி புன்னகை மாறாமல் கேட்ட நெறியாளாரிடம் புன்னகை மாறாமலே பழநியப்பன் சொல்கிறார்,“நியாயம் இல்லை”பிறகு என்னதான் அவர் செய்வதாம்?சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரச்சினை வந்தால் அதை எண்ணி முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அறிக்கை ஏதும் கேட்டால் தரவேண்டும்.கேட்பவருக்கும் சொல்பவர்க்கும் மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்க்கும் நமக்கும் சிரிப்பு வருகிறது.”அப்படி என்றால் மற்ற காலங்களில் அவர் சும்மா உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானா?. ஆளுநர் என்பவர் ஆளுநர் மாளிகைக்கு வருபவர்களோடு தேநீர் பருகிக் கொள்வதோடு நின்றுகொள்ள வேண்டியதுதானா?”சட்டென தெறிக்கிறார் பழநியப்பன்,கொஞ்சமும் சலனமே இல்லாமல் பதில் வருகிறது,
“ஆமாம்”அந்த நேர்காணலில் மரியாதைக்குரிய அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் கிட்டத்தட்ட மத்திய அரசின் முகவராகவே மாறியிருப்பதை நிறுவுகிறார் அவர். அதற்கு மூன்று விஷயங்களை கூறுகிறார்1) மத்திய அரசின் விரும்பியதால் திரு பாண்டியராஜன் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களோடு வெளியேறுகிறார்
2) மீண்டும் மைய அரசு விரும்பியபடி அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் இணைந்தபோது அவற்றின் ஒரு பிரிவில் இருந்து பாண்டியராஜன் மட்டுமே அமைச்சராகிறார்
3) இப்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் உரிமைகளை மைய அரசு கைப்பற்றும் போது திரு பாண்டியராஜன் ஆளுநரை “மக்கள் ஆளுநர்” என்கிறார்இந்த மூன்று விஷயங்களும் தமிழகத்தில் விவாதிக்கப் படாதவை. விவாதிக்கப் படாதவை என்பதைவிட இவை இன்னமும் அதிமுகவிற்கு எதிர் அரசியல் புரிபவர்களாலேயே உரிய முறையில் புரிந்துகொள்ளப் படாதவைஇதை இன்னும் வெளிப்படையாகப் புரிந்து கொள்வதெனில் “அதிமுக அமைச்சரவையில் இருக்கக்கூடிய பிஜேபி பிரதிநிதி பாண்டியராஜன்”. அவர் பிஜேபியிலும் இருந்தவர் என்பது இந்த அய்யத்தை இன்னும் இன்னுமாய் வலுவாக்குகிறது. இதுகுறித்து நமக்கென்ன? அதுகுறித்து கவலைப்பட வேண்டிய எடப்பாடி அவர்களே கொஞ்சமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே என்ற கூற்றும்கூட உண்மைதான்.அவருக்கு அதிமுகவை காப்பாற்ற வேண்டும், மாநில உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. அவருக்குத் தெரியும், தமது எல்லை எதுவரை என்பது. ஆகவே இருக்கும் வரைக்கும் முடிந்த வரைக்கும் பார்த்துக் கொள்வது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்,ஆனால் பொது மக்களாகிய நமக்கு இந்த மண்ணும் இந்த மண்ணின் விழுமியங்களும் மிகவும் முக்கியமானவை. இத்தகைய முதல்வரையும் அவரது சகாக்களையும் வேண்டிய மட்டும் “பார்த்துக் கொள்ள” அனுமதித்துவிட்டு தங்களது மதவெறி பாசிசத்தை இந்த மண்ணில் அவர்கள் தெளிக்க முயற்சிப்பதை பொது மக்கள் பார்த்துக் கொண்டு வாளாயிருந்துவிட முடியாது.எந்த ஒரு ஆளுநரும் மக்கள் ஆளுநராக முடியாது என்கிறார் பழநியப்பன்மக்கள் இயக்குநராக பழநியப்பன் இருக்கிறபோது மக்கள் ஆளுநர் இருக்கக்கூடாதா?ஒரு நொடிகூட இடைவெளி விடாமல் இடைமறிக்கிறார் பழநியப்பன்,முடியாது, முடியவே முடியாது.”எனக்கு மக்கள் பணம் தருகிறார்கள். அவர்கள் தரும் பணத்திற்காக நான் இயக்குகிறேன். ஆகவே நான் அவர்களுடைய இயக்குநன். மக்கள் இயக்குநன். ஆனால் ஆளுநர் ஆளுநரானதற்கும் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை”சரி,இவர்கள் ”பார்த்துக் கொண்டே” இருப்பார்கள்.அவர்கள் இவர்களைப் பார்த்துக்கொள்ள விட்டு தங்களது சாம்ராஜ்யத்திற்கு கால்கோள் செய்ய பாடு படுகிறார்கள்.நாமென்ன செய்யப் போகிறோம்?#சாமங்கவிய 23 நிமிடங்கள்
18.10.2018

Published on October 19, 2018 02:48
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)