நமக்கு நம் மொழி என்றால் அவர்களுக்கு அவர்கள் மொழி

பத்து முறையேனும் இதை இதுவரை முகநூலில் பதிந்திருப்பேன்தேவைப்பட்டால் இன்னும் லட்சம் முறைகூட பதிவேன்இப்போது இதைப் பதிய வேண்டிய தேவையை தோழர் சீமான் கொடுத்திருக்கிறார்தொன்னூறுகளின் துவக்கத்தில் சென்னை கிருஷ்ணகான சபாவில் தமுஎச வின் மாநிலமாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவர் திரு பாலுமகேந்திராஅவர் தமது துவக்க உரையில்,"all mothers are great, but my mother is the greatest" என்று கூறினார்இதை இப்படியும் பெயர்க்கலாம்,"எல்லா தாய்மார்களும் வணங்குவதற்குரியவர்கள்தான்ஆனால் என் தாயோ
எல்லா தாய்மார்களும் எழுந்து நின்று
வணங்குவதற்குரியவள்"இதை நமது தாய்மொழியோடு பொருத்தி பெருமை கொள்ள எல்லா உரிமையும் நமக்கு உண்டுஅதேவேளை நாம் நம் மொழியோடு இதைப் பொருத்திப் பார்த்து பெருமை கொள்வதைப் போலவே தம் மொழியோடு இதைப் பொருத்திப் பார்த்து பெருமை கொள்ள ஒவ்வொரு மொழிக்காரனுக்கும் உரிமை உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்"எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால்
அதை
பிறர் மீது
விடமாட்டேன்"என்பார் ஞானக்கூத்தன்நம் மீது தமது மூச்சை பிறர் விடும்போது தான் நாம் கோவப்படுவதேஅப்படித்தான் நம் மீது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும்போது நமக்கு திணிப்பவர்கள் மீது கோவம் வருகிறதுஅப்போதும் கூட நமக்கு இந்தியின் மீதோ சமஸ்கிருதத்தின் மீதோ கோவமெல்லாம் வருவதில்லைஇதையெல்லாம் பேசுமளவு சீமான் என்ன சொன்னார்?கானா பாடல்களால் தமிழ் சிதைகிறது. தமிழை நரிக்குறவர் மொழியாக்கி விடாதீர்கள் என்று சீமான் சொன்னதை தோழர் Mansoor Mohammed அவர்களது நிலைத் தகவலில் பார்க்க முடிந்ததுஎந்த மொழியும் தாழ்ந்ததல்ல சீமான்உமக்கு உம் மொழி என்றால் எமக்கு எம் மொழி என்றுதான் இந்திக்காரர்களைப் பார்த்து நாம் கூறுகிறோம்இப்போதும் அதையேதான் கூறுகிறோம் நமக்கு நம் மொழி என்றால் அவர்களுக்கு அவர்கள் மொழிநரிக்குறவர்கள் மொழியும் எழுத்து வடிவம் பெறவேண்டும்அவர்களும் அவர்களது மொழியில் இலக்கியம் படைக்க வேண்டும்அவர்களது மொழியும் ஆட்சி மொழியாக வேண்டும்அது என்ன கானாவென்றால் அவ்வளவு கேவலமா சீமான்?அது ஒரு வடிவம்அது ஒரு அழகான குடுவைஅவ்வளவுதான்.அதில் ஊற்றப்படுவது நீரா மதுவா விஷமா என்பதை குடுவை தீர்மானிக்காதுஇப்படி ஏடாகூடமாக உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் மொழி வளராதுகொஞ்சம் புரிந்துகொண்டு நிதானமாக உரையாடுங்கள் தோழர் சீமான்#சாமங்கவிந்து 19 நிமிடங்கள்
28.09.2018
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2018 20:42
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.