நிவேதி வந்திருக்கிறாள். காலையில் தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு முத்தம் கொடுத்து எழுப்பி விழித்ததும் குட்மார்னிங் என்று மழலையில் சொன்னாளென்ற வகையில் இந்த நாள் ஆசீர்வாதத்தோடு தொடங்கியிருக்கிறது.எழுந்ததும் மாமா, கிளம்புங்க அக்காவ பள்ளிக்கூடத்துல உட்டுட்டு (அப்போது கீர்த்தி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்) Ball லும் மெழுகு ஸ்கெச்சும் வாங்கிட்டு வரலாம்.Ball சரி, மெழுகு ஸ்கெச் எதுக்குப்பா?“ம், பூனை வரையப் போறேன்”“அய்யய்யோ, மெழுகுன்னா பூனை சாப்பிடுமே”“எப்புடி?””பூனைக்கு வாய் வரையறப்ப லபக்குன்னு புடிங்குக்கும்”“பரவல்லா, பூனைக்கு பக்கத்துல மொதல்ல சாசர்ல பால் வரஞ்சுக்குறேன். வரஞ்சதும் பூன பால் குடிக்கப் போயிடும். நீங்க ஸ்கெட்ச் வாங்கித் தாங்க”வாங்கி வரும்போது கேட்டாள்,“மாமா, பொய்தானே சொன்னீங்க, பூனை ஸ்கெச் சாப்டாதுதானே?”
Published on September 27, 2018 01:03