நாளை காலை திருவண்ணாமலைக்குச் சென்று சேர்வதாக திட்டம். அங்கே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச்சேர்ந்த நண்பர் ஆனந்த் உன்னத் இலக்கியவட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான உஷா மதிவாணனின் மகள் ரீங்காவை மணக்கிறார். அனேகமாக இலக்கியவட்ட நண்பர்கள் அனைவருமே வந்து சேர்கிறார்கள்.
வம்சி பதிப்பக வெளியீடான 'அறம்' சிறுகதை தொகுதி வெளிவந்துவிட்டது. திருமணத்தில் அறம் வருகையாளர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
ஆறாம் தேதியும் ஏழாம் தேதியும் திருவண்ணாமலையில் இருந்துவிட்டு ஏழாம் தேதி மாலை திரும்புகிறேன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on November 04, 2011 18:08