ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தார் சந்திரபாபு. அவரது எதிர்பார்ப்பை சுக்குநூறாகச் சிதைத்துப் போட்டது இந்திய பட்ஜட். அவரது கட்சியினர் கொதித்துப் போனார்கள். இவர்களை எப்படி சமாளிப்பது என்று குழம்பிய சந்திரபாபு,"ஆந்திர மக்களை தாங்கள் இந்தியர் இல்லையோ என்று எண்ணுமளவிற்கு அவர்களை பட்ஜட் வஞ்சித்துவிட்டது" என்று அறிக்கை விட்டார். கட்சிக்காரர்கள் மகிழ்ந்துபோய் அடுத்தவேலைக்கு தாவினார்கள்.அப்பாடா என்று திரும்பிய சந்திரபாபு கண்களில் சுவரில் மாட்டியிருந்த மோடியின் படம் பட்டது. மிரண்டு போனவராய் ," ஆனாலும் பிஜேபியுடன் கூட்டணி தொடரும்" என்று இன்னுமொரு அறிக்கை விட்டார்.பாம்பும் நோகாமல் பாம்படித்த கோலும் நோகாமல்...சபாஷ் சந்திரபாபுசார்
Published on February 09, 2018 21:48