குளிர்கால ஒலிம்பிக் தென் கொரியாவில் நடக்கிறது. இதில் தமது நாடும் கலந்துகொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாக வடகொரிய அதிபர் கிம்ஜாங் கூறினார். இதனை தென்கொரியா ஒருவித நக்கலோடு நிராகரிக்கும் என்றுதான் பகை வியாபாரிகள் எதிர்பார்த்திருக்கக் கூடும்.ஏன்,கிம் ஜாங் உன்கூட இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும்.ஆனால் மலர்ந்த முகத்தோடும் விரிந்த கைகளோடும் தென்கொரியா இதை வரவேற்றது. மட்டுமல்ல, நடக்கவுள்ள தொடக்கவிழாப் பேரணியில் வடகொரியா கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைத்தது.சுவிட்சர்லாந்தில் இருநாட்டு அதிகாரிளும் கூடிப் பேசினர். விளைவாக,ஒரே கொடியின்கீழ் இருநாடுகளும் இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றன.ஐஸ் ஹாக்கியில் இருநாடுகளும் இணைந்து கொரிய அணி என்ற பதாகையின்கீழ் விளையாடுகின்றனஇவை உலகப் போலீஸ் உள்ளிட்ட பகை வியாபார வல்லூருகளுக்கு அதிர்ச்சியாய் இருக்கக் கூடும்.இருநாடுகளும் பகைமறந்து அன்பில் இணைய இந்தக் குளிர்கால ஒலிம்பிக் வழிவகுக்கட்டும்சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாச் எதிர்பார்ப்பதுபோல் விளையாட்டு பகைமுறித்து கொரிய தீபகற்பத்தில் அமைதியைக் கொண்டுவரட்டும்
Published on February 09, 2018 00:20