கடிதங்கள்
ஜெ
ஒரு பெரிய ஆராய்ச்சிக்கட்டுரை வந்து நாள் ஆகிவிட்டதே? நேரம் கிடைக்கவில்லையா?
நீங்கள் பேய் மாதிரி ( மன்னிக்கவும் வேறு உவமை தோன்றவில்லை) ஒரு சப்ஜெக்டில் எழுதித்தள்ளி பல நாட்கள் ஆகிவிட்டது.
முதல் இரண்டு அத்தியாயம் – கொஞ்சம் ஜாக்கிரதையாகப் படித்துப் பின் ஒவ்வொரு நாளும் எப்போது அதன் அடுத்த பதிவு வரும் என்று பதைத்துக் காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை.
வணக்கத்துடன்
ரமேஷ்
அன்புள்ள ரமேஷ்
நான் ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதுவதில்லை. ஆராய்ச்சிக்கட்டுரைகள் மூலத்தகவல்களைத் தேடி முன்வைப்பவை. உதாரணம் ஆய்வாளர் ராமச்சந்திரன் எழுதுவது போன்ற கட்டுரைகள். அவற்றை எழுத்தாளன் செய்யக்கூடாது. அவன் நேரம் வீணாகும்.
நான் பெரும்பாலும் நூல்களில் கிடைக்கும் தகவல்களையே பயன்படுத்துகிறேன். என் கோணத்தில் அவற்றை விரிவாக அடுக்குவதையே செய்து வருகிறேன். சமீபத்தில் வந்த அயோத்தி தாசர் முதல் சிந்தனையாளர் என்ற கட்டுரை அப்படிப்பட்டதே
பார்ப்போம்.
ஜெ
அன்புள்ள ஜே.
வணக்கம்
எனது ' ரெயில்வே ஸ்ரேஷன் ' கதையை ஒத்த 'அம்மன் மரம் ' நீங்கள் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்.நான் அக்கதையைப் படிக்கவில்லை.முடிந்தால் 'லிங்கை' இணைத்து விடுங்கள் படிக்க ஆவல்.
அன்புடன்
அறபாத். இலங்கை
அன்புள்ள அறபாத்
அம்மன் மரம் என்னுடைய 'ஜெயமோகன் குறுநாவல்கள்' தொகுதியில் [கிழக்கு பிரசுரம்] உள்ளது. கணையாழியில் பிரசுரமானது. இணையவடிவம் இல்லை
ஜெ
''
Published on September 20, 2011 11:30
No comments have been added yet.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
Jeyamohan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
