கூத்து, ஆவணப்படம்

நண்பர் ஹரிகிருஷ்ணன் இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார்.


நாட்டுப்புறக்கலைகளில் ஈடுபட்டுள்ள நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதும், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை உருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது பராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது.


மேற்சென்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டுக் காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் தோற்பாவை|கட்டபொம்மலாட்ட|கூத்துக்கலைஞர் திரு அம்மாபேட்டை கணேசன் அவர்களது வாழ்வியலை ஓர் ஆவணப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அத்தோடு கூத்தில் முதன்மையான கோமாளிப்பாத்திரம் நிகழ்வின் ஊடாகச்சொல்லும் கதைகளையும் அப்பாத்திரம் ஏற்போர் வாழ்க்கையையும் ஒருசேரத் தொகுத்து (எழுத்தாவணமாக) சபையலங்காரம் என்னும் தொகைநூல் வெளியீட்டிற்கான பதிப்புவேலையையும் தொடங்கியிருக்கிறது. பள்ளி,கல்லூரி வளாகங்களில் தோற்பாவைக்கூத்து,பொம்மாலாட்டங்கள் நிகழ்வுகள் நடத்த இசைவான இலகு நிகழ்த்து மேடையொன்றையும் வடிவமைத்துத் தயாரித்து வருகிறது.


இவற்றுக்கான நிதி திட்ட வரைவு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரும்நிதி கோரும் இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி உதவவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு, மு. ஹரிகிருஷ்ணன்,


ஆசிரியர் மணல்வீடு.


manalveedu@gmail.com


குறிப்பு; நன்கொடை வழங்க விழைவோர் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுகிறேன்.


kalari heritage and charitable trust,

a\c.no.31467515260

sb-account

state bank of india

mecheri branch

branch code-12786.


 


நிதி திட்ட வரைவு :


அம்மாபேட்டை கணேசன் ஆவணப்படத்திற்கானது.


பேனாசோனிக் மினி டிவி 3சிடிசி வகை கேமரா.

10நாள் வாடகை.(கேமரா ஸ்டேண்ட், 2 மைக்குகள் ஒளிப்பதிவாளர் சம்பளம் உட்பட)

-50000

கேசட்(பேனா சோனிக் புரோபசனல்)                          2000


பின்னணிக்குரல் முழு படத்திற்கும்                             7500


எடிட்டிங்                                                     20000


முதல் பிரதி காப்பியெடுக்க                                    2500


பின்னணி இசைச்சேர்ப்பு                                       5000


கவர் டிசைனிங்&ஸ்டிக்கரிங்                                   12500


டிவிடி ரைட்டிங் ஆயிரம் பிரதி                               15000


சோனி டிவிடி ஆயிரம் பிரதிகளுக்கு                          15000


போக்குவரத்துச்செலவுகள்                                    2500


மொத்தச்செலவு                                        1,32000


——————————


————————————————–சபையலங்காரம் நூற்பதிப்பு ஆயிரம்பிரதிகள்:புத்தகளவு1\8 டெம்மி சைஸ்

70ஜி.எஸ்.எம் 16ரீம்                                      9600

டைப்செட்,லேஅவுட், பாலிமர்ஸ்                        9000


மெய்ப்பாக்கம்                                             3000


வண்ணமுகப்பட்டைதயாரிப்பு&அச்சு                     10000


புத்தகக்கட்டு                                              7000


மொத்தச்செலவுகள்                                     38600


 



 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2011 12:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.