கண்ணதாசன் விருதுகள்

kanna


 



கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம்,ஆண்டுதோறும் கவியரசரின் பிறந்தநாளினை ஒட்டி கலை இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறது.25.06.2017 அன்று நடைபெறும் கண்ணதாசன் விழாவில் எழுத்தாளர்  பிரபஞ்சன் அவர்களுக்கும் பின்னணிப் பாடகி திருமதி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கும் கண்ணதாசன் விருதுகள் வழங்கப்படவுள்ளன.


வழக்கமாக விருதாளர் ஒவொருவருக்கும் ரூ.50,000 மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கி வரும் இக்கழகம், இம்முறை பத்தாம் அண்டு நிறைவையொட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.1 இலட்சம் விருதுத் தொகையாய் வழங்குகிறது. இவ்விருது,கண்ணதாசன் கழக நிறுவனர் திரு. கிருஷ்ணக்குமார் அவர்களால் நிறுவப்பட்டதாகும்.


 


l.r
கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் 25.06.2017 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நிகழும் இவ்விழாவிற்கு பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையேற்று விருதுகளை வழங்குகிறார். ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம.கிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். கண்ணதாசன் கழக செயலாளர் மரபின்மைந்தன் முத்தையா விருது அறிமுகம் செய்ய இசைக்கவி ரமணன் வாழ்த்துரை வழங்குகிறார்.
 pra
இந்த விருதுகளை இதற்கு முன்னர் எழுத்தாளர்கள் அசோகமித்திரன்,வண்ணதாசன்,ஜெயமோன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியர் அமுத பாரதி, கவிஞர் பஞ்சு அருணாசலம்,  கவிஞர் முத்துலிங்கம், பின்னணிப் பாடகர்கள் பி.சுசீலா, வாணிஜெயராம், சீர்காழி சிவசிதம்பரம், கவிஞரின் உதவியாளர் திரு.கண.முத்தையா, பதிப்பாளர் திரு.பி.ஆர்.சங்கரன், திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு  marabinmaindan@gmail.com

***
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2017 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.