ஜெயலலிதா அவர்களைக் குற்றவாளி என்று சொன்னது நீதிமன்றம்
அவரை பெங்களூரு சிறையிலே அடைத்தது நீதிமன்றம்
அதற்கு எதிராக பேருந்துகள் எரிந்தன, தாக்கப்பட்டன. தனியார் பேருந்துகளும் இயங்கமுடியாத நிலையை ஆளுங்கட்சியினர் செய்தனர்
வெளியே நடமாடவே முடியவில்லை மக்களால். மருத்துவமனைக்குப் போக முடியவில்லை நோயாளிகளால்
இவை யாவும் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதற்காக நிகழ்ந்தவை
எனில், நீதிமன்றத்திற்கு எதிரானவை
அப்போது மொனமாக இருந்த நீதிமன்றம் இப்போது தங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட பணத்தை திருப்பிக் கேட்டுப் போக்குவரத்து தொழிலாளிகள் போராடும்போது வேலைக்குத் திரும்பவில்லை எனில் எஸ்மா பாயும் என்றெல்லாம் மிரட்டுவது வருத்தமளிக்கிறது
ஊழியனிடமிருந்து எடுத்த பணத்தை அவனுக்கு கொடு என்றல்லவா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுருக்க வேண்டும்தி
Published on May 16, 2017 06:42