மாமங்கலை – கடிதங்கள்

tala4


 


வணக்கம்


 


”மாமங்கலையின் மலை” தொடரை தாமதமாக வாசிக்கத்தொடங்கினேன் இருந்தும் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதி முடித்த பின்னர் உங்களுக்கு எழுதலாமென்றிருந்த்தேன் ஆனால் இப்போதேயெழுதுகிறேன். எழுத்தாளனை பிறர் கையில் கொடுத்துவிடும் முதுமையில் தொடங்கி   பல இடஙகளின்  வரலாறை அழகாக சொல்கிறீர்கள். 3 பதிவுகள் வாசித்ததும்  எனக்கு தோன்றியது என்னவென்றால்,  -கொஞ்சமும் உயிரே இல்லாத வரலாற்றுப்பாடங்களை தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் மனனம் செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களைப்போல வரலாற்றை இப்படி சிறப்பாக இல்லாவிடினும் இதில் 100இல் ஒரு பங்கு எழுதினாலே மாணவர்கள் வரலாற்றையும் அறிந்து கொள்வார்கள் அதில் விருப்பமும் உண்டாகும் மதிப்பெண்களும் எடுக்க முடியும்- என்றே!

தலக்காடு, கேரளா, திபெத், மூகாம்பிகை,சபரி மலைப்பயணம்,சீரங்கப்பட்டினம் என்று விரிந்து கொண்டெ போகும் தகவல்கள் கொஞ்சமும் அலுப்புத்தட்டாமல் அத்தனை ஆர்வமாய் இருக்கிறது.

,//நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. // //


 


அனைத்து சில்லறைக் கவலைகளிலிருந்தும் காலத்துயர் ஒன்றுக்கு கடந்து செல்லுதல்////


 


உட்பூசல்கள் நிறைந்திருக்கும் ஒரு பெரிய அரசை சற்று முதிர்ந்த அரசி ஒருவர் சிறப்பாக ஆளமுடியும் // /


 


/ பிறவியே ஒரு நோய்தானே/


 


/ இதெல்லாம் எத்தனை ஆழமான அற்புதமான வரிகள்?


இப்படி சில வரிகள் வரலாற்றுப்பாடபுத்தகத்தில் 40 அலல்து 50 பக்கங்களுக்கு நடுவில் ஒன்றிரண்டு வந்தால் கூட மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்களே? சரண் தருண் கஷ்டப்பட்டு படிக்கும் வரலாற்றுப்பாட புத்தகங்களில் உயிரே இல்லாமல் வரண்டல்லவா இருக்கிறது?


 


புகைப்படங்களும் அருமையாக இருக்கிறதுசார். மணலில் செருப்புகளையும் பயனப்பைகளையும் காவலிருக்கும் சின்னக்சிறு குழந்தைகள், அந்தியின் ஒளியில் ஒரு நாய், பப்பி நாய்க்குட்டியுடன் நீங்கள்,பரிசல் பயணம், என்று!


 


இன்றைய பதிவில் காருக்குள் அமர்ந்து பயணிப்பதைப்பற்றி சொல்லி இருந்தீர்கள். அப்படி நெருங்கி வருவதாலேயே சில குடும்பங்களில் கசப்பு உருவாகலாமென்றும் சொல்லி இருந்தீர்கள். ஆமென்றே நினைக்கிறேன். என் உறவினரின் கணவர் வீட்டில் அவளை வசைபாட த்தொடங்கினால் அவள் சமையலறைக்கோ வேறு அறைக்கோ போய் தாளிட்டுக்கொள்வாள் . அவரோ காரில் நெடும்பயணம் செய்கையில் கோவையத்தாண்டியதும் வசைபாட தொடங்கிவிடுகிறார் இப்போதெல்லாம்.  அவளால் இறங்கி ஓடமுடியாது வேறெங்கும் போய் தப்பிக்க முடியாது அல்லவா?


 


பல நினைவுகளை கிளறிவிடும், பற்பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவும் கலவையான அருமையான பயணக்கட்டுரையாக இருக்கிறது சார் இந்த தொடர்


 


நன்றிகளுடன்


லோகமாதேவி


 


Dear Jeyamohan


The journey to “Kudajadri” and your narration is awesome. I could imagine the mountain ranges submerged under the green foliage, the water falls  like the giant tears from the rocks and the clouds gently caress the mountains as if to console it. Our tradition of the naming convention to natural phenomenon that focus on divinity, resonating the age old culture is a good point.


The setting sun’s rays that magically turns everything into glowing crimson red reminded me the omnipresence of “Mamangalai”. The best part is that you wanted to string all that radiant sunset you have seen around the World into a “Mala” for “Mamangalai”. What a great offering to Mother! Beautiful.


The observation on the reverence shown to the Karnataka writers,  humor with your friends, the description of the region, people, and above all the nature in beautiful Tamil creates an interest to visit the Ma’s abode.


Safe journey. Thank you.


Warm regards,


Sobana


 


அன்புள்ள ஜெ


 


 


நெடுங்காலம் கழித்து ஒரு அற்புதமான பயணக்கட்டுரை. சென்ற பல பயணங்களை நீங்கள் எழுதவில்லை. ஸ்புடிவேலி , அதன்பி ஐரோப்பியப் பயணம், அதன்பின் சிங்கப்பூர், அதன்பின் கேதார்நாத் கடைசியாக தெலுங்கானா பயணம் ஆகியவற்றைப்பற்றி அறிவிப்புகள் மட்டும்தான் வந்தன. இந்தப்பயணக்கட்டுரையை வாசிக்கும்போது ஏக்கமாக இருந்தது. நானெல்லாம் பயணம்செய்ய வாய்ப்பு குறைவான பெண். எனக்கு இந்தப்பயணங்களில் உங்களுடன் வருவதுபோன்ற அனுபவம்தான் முக்கியமான விடுதலை. இந்தக்கட்டுரைகள் தொடரவேண்டும் என நினைக்கிறேன்


 


சித்ரா


 


 


அன்பின் ஜெ,


வணக்கம், மாமங்கலையின் மலை பிரமாதம். குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் இப்படியொரு பயணம் சென்று வர வேண்டும். ரொம்ப நாட்கள் கழித்து ஒரு முழுக் கட்டுரை படித்தேன். மூகாம்பிகையும் சாரதையும் எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்து கொண்டே இருக்கிறேன்.


திருக்குறள் அரசி


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2017 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.