மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்முரசு கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மகாபாரதம் குறித்தும், வெண்முரசு குறித்தும் பலபேருடன் சேர்ந்து அமர்ந்து பேச நேர்ந்தது நிகழ்வு எனக்குப் பெறற்கரியதும், இதுவரை எனக்கு நேராததுமாகும். உண்மையில் அங்கு ஏற்பட்ட நெகிழ்வு மனத்தை ஏதோ செய்கிறது.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை என் தாய்வீடாகவே உணர்கிறேன். முடிந்த சமயங்களில் எல்லாம் இனி அங்கே செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
வெண்முரசு கலந்துரையாடல் குறித்த என் மனப்பதிவை http://mahabharatham.arasan.info/2017/01/venmurasudiscussion.html என்ற சுட்டியில் வார்த்தைகளாக ஆக்கியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி. மஹாபாரதம் மொழியாக்கம் பலரிடம் சென்று சேர்ந்திருக்கிறது என்றால், அதில் உங்கள் பங்கு மகத்தானது.
அன்பும், நன்றியும்…
உங்கள்
அரசன்
மனத்தை நிறைத்த வெண்முரசு கலந்துரையாடல்நிகழ்காவியம்- சென்னை வெண்முரசு விவாதக் குழுமத் தளம்தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on January 24, 2017 10:33