சென்ற ஆண்டு நடத்திய நான்கு புதியவாசகர்களின் சந்திப்புகள் மிக இனிய நினைவுகளாக அமைந்தன. அந்த வாசகர்கள், இளம் எழுத்தாளர்களுடனான நட்பு இன்று பலபடிகளாக வளர்ந்துள்ளது. சென்ற விஷ்ணுபுரம் விருதுவிழாவில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இவ்வருடமும் ஒரு சந்திப்பை நடத்தலாமென நண்பர்கள் சொன்னார்கள்.
ஆகவே ஈரோடு அருகே காஞ்சிகோயில் என்னும் ஊரில் நண்பர் செந்தில்குமாரின் பண்ணையில் சந்திப்பை ஏற்பாடுசெய்துள்ளோம். சென்ற ஆண்டு நிகழ்ந்த அதே தேதிகள். இரண்டுநாட்கள். பெப்ருவரி 18 [சனிக்கிழமை] 19 [ஞாயிற்றுக்கிழமை] இதுவரை சந்திப்புகள் எதிலும் கலந்துகொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை. இருபதுபேர் கலந்துகொள்ளலாம். புதிய படைப்பாளிகள் தங்கள் சில படைப்புக்களை அங்கே விவாதிக்க வைக்கலாம்.
கலந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனுப்பவும்.
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு விண்ணப்ப படிவம்
தொடர்புக்கு:
கிருஷ்ணன் – 98659 16970
சந்திரசேகர் – 98943 26000
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on January 22, 2017 10:30