மருத்துவர் கு சிவராமன் சித்தமருத்துவர். ஆனால் அம்மருத்துவமுறையை நவீன இயற்கைமருத்துவத்தின் கொள்கைகளுக்கு அணுக்கமாக ஆக்க முயல்பவர். இன்றைய வாழ்க்கையில் இருக்கும் உடல்நலச்சிக்கல்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைத்தொடர்கள் மூலம் பெரும்புகழ்பெற்றவர். உடல்நலம் என்பது ஒருங்கிணைந்த இயற்கைநோக்கு மூலம் அமைவது, மருந்துக்களால் அல்ல என்பதை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார் என்று சொல்லலாம்