தேசியக்கல்விக் கழக சீன மாணவர்களுக்காக இன்று சினிமா எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற்றி ஒரு வகுப்பு எடுக்கவேண்டும். அதற்காக நான் எழுதிய சினிமாக்களில் இருந்து சில கிளிப்பிங்குகளைக் காட்டலாமென முடிவுசெய்தேன். யூடியூபில் நான் கடவுள் கிடைத்தது
நான்கடவுளின் காட்சிகள் வியப்பூட்டின. நான் எழுதியபோது என் மனதில் ஒரு சித்திரம் இருந்தமையால் சரியாகக் கவனிக்கப்படாதுபோன காட்சிகள் இவை. இன்று மிக விலகிவந்தபின் பார்க்கும்போது அவற்றின் மொழி ஆச்சரியமளிக்கிறது. இது முதல்காட்சி
முதலில் கங்கையில் ஒரு தீபம். பின்னர் புனிதமும் கோலாகலமுமான கங்கா ஆரத்தி. அழகு, மங்கலம். சட்டென்று தலைகீழாக கதாநாயகன் அறிமுகமாகிறான். முற்றிலும் வேறு உலகம். தலைகீழ் உலகம். அவன் விழிகள் திறந்து உலகைப்பார்க்கின்றன. படம் தொடங்குகிறது. பாலா காட்டவருவது அது
இன்னொரு காட்சி. ‘ஏழாம் உலகம்’. தாண்டவன் நாம் வாழும் உலகில் காரிலிருந்து இறங்குகிறான். நடந்து நடந்து பாதாளம் நோக்கிச் செல்கிறான். இருட்டு. அதிலிருந்து வெளிவருபவன் பாதாளத்துக்குள் செல்கிறான். அங்கே விபரீதமான உருப்படிகள். அவர்களின் முகங்கள். உணர்ச்சியற்று தாண்டவனை வெறிக்கும் ஒருமுகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது, அவர்களுக்கு அவன்கூட ஒரு பொருட்டே அல்ல என்று.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on September 19, 2016 11:32