Sayanthan Kathir's Blog
July 3, 2021
அஷேரா! சிதறிய எறும்புகளின் கதை – ஜேகே
எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலில் எழுதப்பட்டிருக்கும் இரவு பற்றிய குறிப்புகள் இவை. “இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையைப் போன்றது. அதன் அதன் தீரா வாசனை எங்கேனும் பரவி இருக்கிறது” ‘அஷேரா’ நாவலை வாசித்த கணங்களின்போது அதுவும் இரவைப்போலவே ஒரு இரகசிய நதியாக நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கும். சுவிற்சலாந்தின் பனிக்குளிருக்கு உறைந்து, வசந்தங்களில் குளிர்ந்து, கோடையில் தணிந்து, கொழும்பின் அழுக்கான […]
Published on July 03, 2021 10:24
அஷேரா! சொல்லப்படாத கதை – வெ.நீலகண்டன்
நாற்பதாண்டுக்கால ஈழத்து வாழ்க்கைத் துயரங்களைத் தன் இரு நாவல்களில் உளவியல் நுண்ணுணர்வோடு பதிவு செய்து கவனம் ஈர்த்த சயந்தனின் மூன்றாவது நாவல் ‘அஷேரா.’ போர், தனிமனிதர்களின் வாழ்க்கையை எப்படிக் கூறுபோட்டு விளிம்புக்குத் துரத்துகிறது என்ற எதார்த்தத்தை அருள்குமரன், அற்புதம், அபர்ணா, நஜிபுல்லா போன்றவர்களின் வாழ்க்கையைக் கொண்டு காட்சிப்படுத்துகிறார் சயந்தன். புலிகள் இயக்கத்திலிருந்து மீண்டு சுவிட்சர்லாந்துக்குத் தஞ்சம் கோரி வருகிற அருள்குமரன், புளோட் அமைப்பிலிருந்து மீண்டு ஏற்கெனவே சுவிஸில் அகதியாக வசிக்கிற மூத்த தலைமுறையைச் சேர்ந்த அற்புதத்தைச் சந்திக்கிறான். […]
Published on July 03, 2021 10:20
May 13, 2021
அஷேரா! மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதல் – கோணங்கி
திராட்க்ஷை ஜாரில் 243-ஆம்பக்கத்தில் தோன்றும் கிழவன்தான் இந்த அஷேரா நாவலின் தீர்க்கதரிசியாக வந்து மறைகிறான். இந்த ஈழ மண்ணின் குருதியுடன் பிசைந்து வடித்த இந்த பழஞ்ஜாடிக்குள் அஷேராவின் கதா உருக்களெல்லாம் ஜாடியின் சுவர் வழியே கசிந்து வந்து திரும்பவும் உள்ளே மறைந்து விடுகிறார்கள். எல்லாக் கொடுமைகளையும் தாங்கி உடைபடாத ஈழ ஜாடியை அருள்குமரன் நீல நிறக் குறிப்புகளால் இருட்டிலும் பின்னிரவுகளிலும் தாள்களில் யாருக்கும்தெரியாமல் எழுதியெழுதிப் பலியான ஈழ விக்ரகங்களுடன் மறைத்துவைத்திருக்கிறான். தேனில் ஊறிய பூச்சிகளின் தித்திக்காத மரணம் […]
Published on May 13, 2021 11:36
April 14, 2021
அஷேரா! காலங்கடந்தும் வாழவல்ல ஒரு படைப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்
எழுத்தாளர் சயந்தனின் ஐந்தாவது நூலும் மூன்றாவது நாவலுமாகிய அஷேராவை வாசித்துமுடித்த சூட்டோடு இந்தக் குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தது ஒருவகையில் தற்செயலானதே. அவரது சிறுகதைத் தொகுப்பான அர்த்தம், நாவல்களான ஆறாவடு, ஆதிரை ஆகிய நூல்களை நான் ஏற்கனவே வாசித்திருந்த போதும், ஆறாவடு நாவலைத் தவிர, மற்றைய நூல்கள் பற்றி ஏதாவது குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. இப்போது, இந்த நூல் பற்றி. மீண்டும் கலைமுகத்தின் இதே பத்தியில் எழுதும் சந்தர்ப்பம் வந்தபோது முன்பு எழுதியது ஞாபகத்துக்கு […]
Published on April 14, 2021 21:55
April 13, 2021
அஷேரா! ஆறாவடுவின் தொடர்ச்சி – மல்லியப்புசந்தி திலகர்
1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர் அழகாக இருந்தார். அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனியாக இருந்தது. அவரது நடை, உடை பாவனை, இலங்கை குறித்த பார்வை ( ஏளனமாக என்றுகூட கொள்ளலாம்) புலம்பெயர்ந்தவர்கள் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்கள் […]
Published on April 13, 2021 10:25
April 10, 2021
அஷேரா! உடல் உள ஏக்கங்களின் தேடல் – நிலாந்தி சசிகுமார்
சயந்தனின் படைப்புகளில் ஆறாவடு, ஆதிரை வரிசையில் இன்று அஷேரா. இலங்கைக்கு சம்பந்தமற்ற ஒரு தலைப்பில் போருக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டமைந்த புனைவுகளின் செறிவு. அஷேராவின் வரலாற்றுக்கும் உலகத்தின் அனைத்துப் பெண்களின் கதைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அந்தவகையில் தான் நாவலை நாம் நோக்க வேண்டும். அதே சமயம் நாவலின் நகர்வு ஈழப்போரின் தாக்கத்தின் விளைவுகளை மீட்டிச் சென்றதையும் கொஞ்சம் கவனிக்கவே வேண்டும். இலங்கையில் வாழ்பவர்களும், புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் தமது படைப்புகளில் ஈழப் போர் மற்றும் அதன் தாக்கங்கள் […]
Published on April 10, 2021 00:17
March 26, 2021
அஷேரா! ஈழத்தின் இன்னொரு முகம் – திராவிடமணி
ஈழத்திலிருந்து அகதிகளாக சுவிற்சர்லாந்திற்கு வந்த அருள்குமரன், அற்புதம், என்ற இருவர் கடந்து வந்த பாதைகளின் வலிகளைப் பற்றிப் பேசும் புதினம். அருள்குமரனும், அற்புதமும் ஈழத்தில் பிறந்து, பல்வேறு இயக்கங்களைக் கடந்து உயிர்வாழ்தலின் தேவையுணர்ந்து அந்நாட்டிலிருந்து தப்பித்து சுவிற்சர்லாந்திற்கு வந்து… அகதிமுகாமில் தங்கி, அந்நாட்டுக் குடியுரிமைப் பெற்று வாழ முற்படுகிறார்கள். அவர்கள் இளமையில்,கண் முன்னே கண்ட கோரத் தாக்குதல்கள். இனப் படுகொலைகள். இயக்கங்கள், அவைகளின் முரணான செயல்பாடுகள், அதன் விளைவால் அவர்கள் பெற்ற வலிகள் இவற்றைப்பற்றியும் விரவாக இப்புதினம் […]
Published on March 26, 2021 13:08
அஷேரா! நீரோட்ட ஆழம் – கஜுரி புவிராசா
துரோகங்களால் இன்று இந்த நிமிஷம் வரை வதைபட்டுக்கொண்டிருக்கிறது ஒரு இனம்… அதன் இன்னல்களை பட்ட வதைகளை சிந்திய சிவப்புத் துளிகளை தெறித்த நிணக்குழம்புகளை எல்லாம் எதிர்காலத்திற்கு கடத்தியாக வேண்டியது காலத்தினது மட்டுமல்ல ஒவ்வொருவருடைய கடப்பாடும்.. காயங்கண்ட சிம்மங்களோ புலிகளோ நாவால் அந்த காயத்தை வருடி வருடி வலி மிகச்செய்து தான் காயமாற்ற விளையும்…சில வன்மங்களும் அப்படித்தான்… சில நூல்களை மட்டும் தான் ஆத்மார்த்தமாக ஒரே மூச்சில் வாசித்து அப்பாடா என்று எமக்கே ஒரு ஆன்ம திருப்தியைக் கொடுக்கவியலும். […]
Published on March 26, 2021 12:47
February 27, 2021
அஷேரா! அற்புதம்மான் – நெற்கொழுதாசன்
“அஷோராவின் அற்புதம்” என்பது, வார்த்தைகளுக்குள் உறைந்துபோய் விடக்கூடிய ஒரு உணர்ச்சியல்ல. ஒவ்வொரு பகுதிகளாக வரைந்து வரைந்து சட்டென முழுமையான சித்திரமொன்றை காட்சிப்படுத்தி உணர்ச்சிப்பிழம்பான மனநிலையை உருவாக்கிவிடுகின்றது. 0 மறந்துவிட, விலகிப்போக, மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற தவிப்பை தினம்தோறும் கொண்டலைகின்ற , அவற்றிலிருந்து வெளியேறி, தனக்கானதொரு வாழ்வை கண்டடைய முனையும் எத்தனிப்புக்களை கொண்ட மனிதர்களின் கதையிது. ஒன்றை சொல்லிவிடுகிறேன். மனிதர்கள் இப்படித்தான் இருக்கமுடியும். மனிதர்கள் நிலங்களால் பிணைக்கப்பட்டவர்கள். வேட்கைகளால் நிரம்பியவர்கள். நிலம் நீங்கியவர்களிடம் மிஞ்சி இருப்பது நிலம் […]
Published on February 27, 2021 05:21
அஷேரா! புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்
ஈழப்போராட்ட வரலாற்றையும் அதன் அதிர்வுகளையும் கண்ணீரும் இரத்தமுமாகப் பேசிய ஆதிரைக்குப்பின்னராக சயந்தன் அண்ணாவால் எழுதப்பட்டிருக்கின்ற அஷேரா நாவலானது , “போராட்டம் முடிவடைந்த பின்னர் தனி மனிதன், தன் அடுத்த கட்ட வாழ்வியலுக்குள் இயல்பாக நகரமுடியாது உழல்கின்ற தன்மையை தனிமனித போராட்டமாக உணர்வு கொந்தளிக்க பேசுகின்றது. தமிழீழம் என்ற ஒற்றை இலக்கிற்காக ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்த இயக்கங்கள் அத்தனையும் “தனிமனித தவிப்புக்களையும், தொடர்ச்சியான உளப்போராட்டங்களையுமே பரிசளித்துச் சென்றிருக்கின்றது. தனிநாடு கேட்டு போராடிய தமிழன் தன் இனத்திற்குள்ளேயே ஒருவனை ஒருவன் போட்டுக்கொடுத்து […]
Published on February 27, 2021 05:17
Sayanthan Kathir's Blog
- Sayanthan Kathir's profile
- 17 followers
Sayanthan Kathir isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
