பனி உருகுவதில்லை Quotes
பனி உருகுவதில்லை
by
அருண்மொழி நங்கை28 ratings, 4.50 average rating, 2 reviews
பனி உருகுவதில்லை Quotes
Showing 1-1 of 1
“நான் என்னை, அந்நாவலின் பதிமூன்று வயது நெல்லியுடன் அடையாளப்படுத்திக் கொண்டேன். அவளுடன் அலைந்தேன். அவள் அவமானப்படுத்தப்படும் போதும், துன்பப்படுத்தப்படும்போதும், அவள் தந்தை அவளை இரக்கமின்றி கைவிடும்போதும், மனம் நொந்தேன். இலக்கியவாதிகள் கருணையற்றவர்கள். மாற்றவியலா விதியின் கரங்களால், மனிதர்கள் பகடைகளாய் உருட்டப்படும்போது, இவர்கள் மௌன சாட்சிகளாய் உடன் நிற்கிறார்கள்.
சிலசமயம் பின்னிரவின் தனிமையில், எனது மேஜை விளக்கொளியில் , மதுரையின் வேனிற்கால இரவில், பீட்டர்ஸ்பர்க்கின் உறைபனியின் குளிரை உணரும், கந்தலாடை அணிந்த நெல்லியாக நான் உருமாறியிருக்கிறேன். ஒருகட்டத்தில் மனம் உருகி கண்ணீர் நாவலின் பக்கங்களில் சிதறும். எட்டுவயது அருண்மொழியின் கண்ணீரும், இருபது வயது அருண்மொழியின் கண்ணீரும் ஒன்றுதான், ஒரே அடர்த்திதான். இலக்கியம் தருவது வாசிப்பின்பம், மகிழ்ச்சி, உணர்வெழுச்சிகள், உன்னத தருணங்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி பிறர் துன்பத்திற்காக விடும் கண்ணீரில்தான் இலக்கியத்தின் தெய்வம் வாழ்கிறது.”
― பனி உருகுவதில்லை