கந்தர்வன் சிறுகதைகள் Quotes

Rate this book
Clear rating
கந்தர்வன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) கந்தர்வன் சிறுகதைகள் by கந்தர்வன்
2 ratings, 4.50 average rating, 0 reviews
கந்தர்வன் சிறுகதைகள் Quotes Showing 1-6 of 6
“கீச் கீச் என்று பறவைகள் சப்தம் காதை நிறைத்தது. கீற்றுக் கீற்றாய்ப் பறவை ஒலிகள். அமைதியாயிருப்பதை விடவும் இப்படிப் பறவை ஒலியால் அமைதி குலைவது சுகமாய்த் தோன்றியது.”
கந்தர்வன், கந்தர்வன் சிறுகதைகள்
“ஊரில் அம்மாவுக்கு ரொம்பப் பிடித்த இடம் கண்மாய்க்கரை ஆலமரத்துப் பிள்ளையார். இந்த பகுதியில் எல்லா ஊர்களிலும் வேம்பு, கருவேல், பூவரசு, மஞ்சனத்தி இவைதான் மரங்கள். இந்த ஊரில்தான் அபூர்வமாக ஆலமரம். சடைசடையாய் விழுதுகள். விழுதுகளை பிடித்துப் பிள்ளைகள் ஆடுவார்கள். கண்மாய் நிறைந்த காலங்களில் விழுதில் தொங்கிப்போய் நீரில் குதிக்கலாம்.”
கந்தர்வன், கந்தர்வன் சிறுகதைகள்
“ஆறே முக்கால் கோடி என்று போட்டால் எங்கே குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்று அறுநூற்றி எழுபத்தைந்து லட்சங்கள் செலவில் கட்டப்பட்டிருக்கிறதாகப் பிரதான சாலையில் பலகை நட்டிருக்கிறார்கள்.”
கந்தர்வன், கந்தர்வன் சிறுகதைகள்
“ரொம்ப வருஷம் முன்னால் எழும்பூர் மருத்துவமனைக்குப் போனபோது,
'The first eye donor of the world is Kannappa Nayanar' என்று எழுதி வைத்திருந்த கூர்மை இப்போது ஞாபகத்தில் வருகிறது.”
கந்தர்வன், கந்தர்வன் சிறுகதைகள்
“அவனவனுக்கும் உள்ள லட்சியம் அவனவனுடைய தலைக்குக் கிரீடம் வரவேண்டுமென்பதுதான். வார்த்தைகள் தடம் மாறி அர்த்தம் மாறி அலைகின்றன. ஆசைகளை லட்சியங்கள் என்கிறார்கள்.”
கந்தர்வன், கந்தர்வன் சிறுகதைகள்
“ஒருநாள் கள்ளிச் செடியைக் கொண்டுவந்து குழி வெட்டி மணல் பரப்பிச் செடியை ஊன்றித் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நேரம் அப்பா வந்துவிட்டார். "கள்ளியைக்கொண்டு வந்து வீட்டு வாசலில் நடலாமா! இதையெல்லாம் பைத்தியந்தான் செய்யும்?" என்று சொல்லிக்கொண்டே பிடுங்கி வெகுதூரத்தில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தார்.

மரங்களும் செடிகளும் தாயைப்போல. அப்பாவைப்போல அரக்கத்தனமான ஆண் இனமே தாவரங்களில் இல்லை. எல்லாம் பெண் இனம்; வாஞ்சை மிகுந்த இனம். அப்பா திவசம் முடிந்த மறுநாள் ஓர் அழகான கள்ளிச் செடியைக் கொண்டுவந்து வாசலில் நட்டான்.”
கந்தர்வன், கந்தர்வன் சிறுகதைகள்